» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் ஓசிடி கருவி : ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்

வெள்ளி 14, மார்ச் 2025 5:04:56 PM (IST)



ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் OCT இயந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இன்று (14.03.2025) கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்து கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு மருத்துவத்துறையில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து, அத்திட்டங்கள் அனைத்து பொதுமக்களிடையே விரைந்து சென்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

குறிப்பாக மக்களைத்தேடி மருத்துவம், தொழிலாளர்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் 48 திட்டம், முத்துலெட்சுமி அம்மையார் மகப்பேறு திட்டம், 108 சேவை, விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கடந்த 10.03.2025 முதல் 16.03.2025 வரை நடைபெற உள்ள கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வார விழா நிகழ்சியின் ஒருபகுதியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண் மருத்தவமனையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக OCT இயந்திரம் இன்று செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மட்டுமல்லாது தக்கலை, குழித்துறை, கன்னியாகுமரி, குலசேகரம், குளச்சல் உள்ளிட்ட தலைமை மருத்துவமனைகளிலும் கண்நீர் அழுத்த நோய் குறித்து பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியல் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இராமலெட்சமி, ஐஆர்இஎல் முதன்மை பொது மேலாளர் மற்றும் தலைவர் செல்வராஜன், மாவட்ட திட்ட மேலாளர் (பார்வை இழப்பு தடுப்புச்சங்கம்) பீனா, உறைவிட மருத்துவர்கள் ஜோசப் சென், உதவி உறைவிட மருத்துவர்கள் விஜயலெட்சுமி, ரெனிமோல், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory