» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.64 கோடி நலத்திட்ட கடனுதவிகள்

சனி 8, மார்ச் 2025 4:07:18 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில்  மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.64 கோடி மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 100 இளஞ்சிவப்பு ஆட்டோக்களை பயனாளிகளுக்கு வழங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தும், சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் சார்பில் 50 மின் ஆட்டோக்களை மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 100 ஆட்டோக்களை பயனாளிகளுக்கு வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட 617 சுயஉதவிக்குழுவினருக்கு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் தலைமையில், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, முன்னிலையில் சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் இன்று (08.03.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக நகர்புர வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர் வரவேற்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட ஊரக பகுதிகளில் 4517 சுயஉதவிக்குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 6236 சுயஉதவிக்குழுக்கள் உட்பட மொத்தம் 10,753 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புர வாழ்வதார இயக்க திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. மகளிர் சுயஉதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு சுயதொழில் மேற்கொள்ளுவதற்கு வங்கிகள் மூலம் கடன் இணைப்பு ஏற்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது.

2024-2025-ஆம் ஆண்டிற்கு ரூ.881.00 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி ஊரக பகுதிகளில் செயல்படும் 3256 குழுக்களுக்கு ரூ.328.10 கோடியும், நகர்ப்புர பகுதிகளில் 6749 குழுக்களுக்கு ரூ.432.43 கோடி உட்பட மொத்தம் 10005 குழுக்களுக்கு 31.01.2025 வரை ரூ.760.54 கோடி வங்கி இணைப்பு ஏற்படுத்தி வழங்கப்பட்டுள்ளது. சுயஉதவிக்குழுவின் மூலம் காளான் வளர்ப்பு, சணல்நார் பைகள் தயாரித்தல், சிற்றுண்டி தயாரித்தல், அழகு கலை நிலையங்கள், சமையல்கலைகள், மீன் உணவு வகைகள், மிளகு, மஞ்சள் போன்ற வாசனை பொருட்கள் பயிரிடுதல் போன்ற தொழில்களை செய்து வருமானம் ஈட்டி வருகின்றார்கள்.

இன்றைய நிகழ்ச்சியில் சுயஉதவிக்குழுக்களுக்கான வங்கிகடன் 447 சுயஉதவிக்குழுக்களில் உள்ள 6531 பயனாளிகளுக்கு ரூ.53.71 கோடி மதிப்பிலும், ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கான வங்கி பெருங்கடன் 162 சுயஉதவிக்குழுக்களில் உள்ள 2065 பயளாகளிகளுக்கு ரூ.10.50 கோடி மதிப்பிலும், மணிமேகலை விருது 8 பேருக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பில் காசோலையும் என மொத்தம் 8612 பயனாளிகளுக்கு ரூ.64 கோடி மதிப்பில் நலத்திட்ட உ தவிகள் வழங்கப்பட்டுள்ளது.உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பாலசுந்தரம் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு கருணாவதி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர் சண்முக சுந்தர பாண்டியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார், பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள்சோபன், மகளிர் திட்ட அலுவலர்கள், பணியாளர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory