» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பைக் ஓட்டிய சிறுவன்: தாயாருக்கு தண்டனை!

சனி 8, மார்ச் 2025 3:59:08 PM (IST)

மாா்த்தாண்டம் அருகே பைக் ஓட்டியதாக வழக்குப் பதியப்பட்ட சிறுவனின் தாயாருக்கு நாள் முழுவதும் நீதிமன்றத்தில் அமா்ந்திருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

குமரி மாவட்டம, மாா்த்தாண்டத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளா் செல்லசாமி தலைமையிலான போலீசார் அண்மையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது 17 வயது சிறுவன் ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்து, சிறுவனின் தாயாருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, வழக்குப் பதிந்தனா்.

இந்த வழக்கு குழித்துறை நீதித்துறை நடுவா் மன்றத்தில் (எண் 2) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பைக் ஓட்டிய சிறுவனின் தாயாரை ஒரு நாள் முழுவதும் நீதிமன்றத்தில் அமா்ந்திருக்கும் தண்டனையை வழங்கினாா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory