» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மதிய நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கவும்: பொது சுகாதார துறை அறிவுரை!

சனி 8, மார்ச் 2025 12:22:31 PM (IST)



கோடைகால வெப்ப அலையிலிருந்து காத்துக் கொள்வதற்கான பொது சுகாதார துறை பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது. 

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

  • உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்லுங்கள்.
  • ஓ ஆர் எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும்.
  • பருவகால பழங்கள் காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுங்கள்.
  • முடிந்தவரை வீட்டிற்குள் பாதுகாப்பாக இருங்கள்.
  • நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்கவும்.
  • மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும்.
  • வெளியில் செல்லும்போது காலணிகளை அணியவும்.
  • மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்லவும். முடிந்தவரை மதிய நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கவும்.
  • மேற்கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் கோடை கால வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
  • குழந்தைகளையும்  வயதானவர்களையும் வெயிலின் தாக்கம் அதிகமாக பாதிக்கும் எனவே குழந்தைகளுக்கு மோர், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு, தர்ப்பூசணி பழச்சாறுகளை கொடுக்கலாம். 
  • எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனைகளில் வெப்ப அலையால் ஏற்பட்ட பாதிப்புகளால் (Heat Rash, Itching, Heat Cramps, Heat Stroke etc)  தங்களிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் விவரங்களை தங்கள் அருகில் உள்ள சுகாதாரத் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் மற்றும் (IHIP Portal) இல்  பதிவேற்றம் செய்ய வேண்டும்" என பொது சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory