» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் புதிய மினிபேருந்து இயக்க அனுமதி மார்ச் 15 வரை காலஅவகாசம் நீட்டிப்பு!

வெள்ளி 7, மார்ச் 2025 12:52:17 PM (IST)

குமரி மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் மினிபேருந்து இயக்க அனுமதி கோரும் விண்ணப்பங்கள் சமர்பிக்க மார்ச் 15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட அறிவிப்பு : மினிபேருந்திற்கான புதிய விரிவான திட்டம்-2024, பு.ழு.ஆள.ழே.33இ  நாள்: 23.01.2025-ன் படி கிராமப் புறங்களிலும் மினிப்பேருந்து வசதியினை ஏற்படுத்தி தரும் பொருட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசிதழ்கள் எண் 2 மற்றும் 4-ல் வெளியிடப்பட்டுள்ள கீழ்க்கண்ட வழித்தடங்களுக்கு புதிய அனுமதி கோரி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி 15.03.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

வழித்தட விவரம்

 1. இரவிபுதூர்கடை மசூதி முதல் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் வரை ( 01)

2. புத்தன்சந்தை சிவன்கோவில் திருப்பு முதல் பளுகல் பேருந்து நிலையம் வரை (04) 

3. பளுகல் பேருந்து நிலையம் முதல் மடத்துவிளை சிஎஸ்ஐ சர்ச் வரை  (05)

4. தேவிக்கோடு முதல் நெடுங்குளம் (அருமனை) வரை (10)

5. ஜேப்பியார் மீன்பிடி துறைமுகம் முதல் புனித ஜார்ஜ் தெரு பி.எட் காலேஜ் வரை (11) 

6. பறக்கை மதுசூதனபெருமாள் கோவில் முதல் கீழ மணக்குடி வரை (02)

7. இறச்சகுளம் பேருந்து நிறுத்தம் முதல் சுருளோடு பாலம் வரை (03)

8. தடிக்காரன்கோணம் ஜங்சன் முதல் மறைமலை நகர் பஞ்சாயத்து அலுவலம் வரை (04)

9. என்ஜிஓ காலனி பால் சொசைட்டி முதல் அன்னை நகர் வரை (06)

10. பீச் ரோடு ஜங்சன் முதல் ஈத்தாமொழி சிவா மருத்துவமனை வரை (10)

11. இறச்சகுளம் ஜேஎஸ் மஹால் முதல் பார்வதிபுரம் வரை (12)

12. பள்ளவிளை டவுண் இரயில்வே நிலையம் முதல் வேதநகர் வரை (13)

13. இறச்சகுளம் பாரதி நகர் முதல் தரிசனம்கோப்பு பால் சொசைட்டி வரை (14)


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory