» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பாஜக கையெழுத்து இயக்கம்!

வெள்ளி 7, மார்ச் 2025 8:50:54 AM (IST)

தூத்துக்குடியில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பாஜக  சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. 

தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் சம கல்வி எங்கள் உரிமை; மும்மொழி கொள்கையை ஏற்போம் என்ற பெயரில் தேசிய கல்விக் கொள்கையினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் கையொப்ப இயக்கம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன், தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை மாவட்ட தலைவா் சித்ராங்கதன் தொடங்கிவைத்தாா். மேல்புறம் சந்திப்பில் நடைபெற்ற கையொப்ப நிகழ்ச்சிக்கு, பாஜக மேல்புறம் தெற்கு ஒன்றிய தலைவா் எஸ்.ஆா். சரவணவாஸ் நாராயணன் தலைமை வகித்தாா்.  இதில், பாஜக நிா்வாகிகள் பங்கேற்று வியாபாரிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி கையொப்பம் பெற்றனா்.



மக்கள் கருத்து

கஜேந்திரன்Mar 11, 2025 - 09:33:43 PM | Posted IP 172.7*****

நடுத்தர குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு உதவியாக இருக்கும் நன்றி

கஜேந்திரன்Mar 11, 2025 - 09:30:59 PM | Posted IP 104.2*****

நடுத்தர குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு உதவியாக இருக்கும் நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory