» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை: கப்பல் ஊழியரை வெட்டிக்கொன்ற கணவன்- மனைவி கைது!

வியாழன் 6, மார்ச் 2025 8:17:56 PM (IST)

அகஸ்தீஸ்வரம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் கப்பல் ஊழியரை வெட்டிக்கொன்ற கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே கருங்குளத்தான்விளை பகுதியை சேர்ந்தவர் பரமேஷ் (37). முன்னாள் கப்பல் ஊழியரான இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கணபதி (45) என்பவரது மனைவி ஜான்சி மெரின் ஷோபிதா (42) என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. நேற்று இரவு வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த பரமேசை, ஜான்சி மெரின் ஷோபிதா மற்றும் அவரது கணவர் கணபதி இருவரும் தடுத்து நிறுத்தி தகராறு செய்தனர். 

பின்னர் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதில் பரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட எஸ்பி ஸ்டாலினும் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். பரமேசை கொலை செய்த கணபதி, ஜான்சி மெரின் ஷோபிதா இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொலை செய்யப்பட்ட பரமேசின் தந்தை இறந்துவிட்டார். அவரது சகோதரியும் இறந்துவிட்ட நிலையில் அம்மாவுடன் பரமேஷ் வசித்து வந்தார். கோடிக்கணக்கில் சொத்துகளும் பரமேசுக்கு இருந்தது. வேலைக்கு செல்லாமல் இருந்த பரமேஷ் சொத்துக்களை விற்று செலவு செய்ய தொடங்கினார். கடந்த சில நாட்களில் மட்டும் லட்சக்கணக்கான மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்து செலவு செய்து உள்ளார்.

இந்த நிலையில் தான் எதிர்வீட்டை சேர்ந்த ஜான்சி மெரின் ஷோபிதாவுக்கும், பரமேசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜான்சி மெரின் ஷோபிதா, கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பரமேஷ் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாகவும் தகராறு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக ஜான்சி மெரின் ஷோபிதா, பரமேசுடன் பழகுவதை தவிர்த்து வந்தார். 

இதனால் பரமேஷ் அடிக்கடி குடிபோதையில் ஜான்சி மெரின் ஷோபிதாவிடம் தகராறு செய்து வந்தார். பரமேஷ் குடிபோதையில் தகராறு செய்து வந்ததால் ஜான்சி மெரின் ஷோபிதா அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். தனது கணவரிடம் கூறி பரமேசை கொலை செய்ய திட்டம் தீட்டினர். நேற்று இரவு வெளியே சென்று விட்டு பரமேஷ் வீட்டிற்கு வரும்போது அவரை வெட்டி கொலை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி பரமேஷ் வெளியே சென்று விட்டு இரவு வீட்டிற்கு வரும்போது அவரை தடுத்து நிறுத்தி அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். அவர் தங்களை தாக்காமல் இருக்கும் வகையில் மிளகாய் பொடியையும் கரைத்து அவரது முகத்தில் ஊற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட கணபதி, ஜான்சி மெரின் ஷோபிதாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory