» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை: ஆட்சியர் வழங்கினார்!
வியாழன் 6, மார்ச் 2025 11:06:26 AM (IST)

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பணி நியமன ஆணையினை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கி தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கங்கைகொண்டான் டாடா பவர், போஷ் நிறுவனம், /ப்ளோ குளோபல், ஆழ்த்தி சொலுஷன்ஸ், ர்-ஷெல் பிசினஸ் சொலுஷன்ஸ், பிடிம் டெக்னாலஜிஸ், /கிலோவின் டெக்னாலஜிஸ் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 750 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் முகாமில் கலந்துகொண்டனர். இவர்களில் 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள், இளைஞர்களுக்கு பணிஆணை வழங்கப்பட்டது. பணியாணை பெற்ற மாணவர்களை வாழ்த்துகிறேன். மேலும் மற்றவர்கள் தொடர்ந்து உங்கள் திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள். இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலக உதவி இயக்குநர் லட்சுமிகாந்தன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க திருநெல்வேலி மண்டல திட்ட மேலாளர் ராகுல், ஓசூர் மண்டல திட்ட மேலாளர் ஜிஜின் துரை, நான் முதல்வன் சார்பில் சுந்தர், பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த மனித வள அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் ஆதார் வைத்துள்ளார்களா என ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:41:07 PM (IST)

சுசீந்திரம் குளத்தில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை : ஆட்சியர் உத்தரவு
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:17:29 PM (IST)

தங்க நகை கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதி ஏழைகள் நலனுக்கு எதிரானது: விஜய் வசந்த்
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:14:23 PM (IST)

கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 3:19:25 PM (IST)
