» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தக்கலை அருகே வங்கி ஏ.டி.எம். உடைப்பு: 2 பேர் கைது
புதன் 5, மார்ச் 2025 8:39:56 PM (IST)
தக்கலை அருக மது போதையில் வங்கியின் ஏ.டி.எம். மையத்தை அடித்து உடைத்து சேதப்படுத்திய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் தக்கலையை அடுத்த முளகு மூடு அருகே உளள கல்லு விளையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் முன்பு ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தை சுற்று வட்டார மக்கள் பயன்படுத்தி வந்தனர். வங்கியோடு இணைந்து ஏ.டி.எம். அமைந்திருப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு யாரோ மர்ம நபர்கள் அங்கு வந்து ஏ.டி.எம். கண்ணாடியை உடைத்துள்ளனர். அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தையும் சேதப்படுத்தி உள்ளனர்.
மறுநாள் காலை அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் வங்கி நிர்வாகத்தி னருக்கு தகவல் கொடுத்த னர். அதன்பேரில் வங்கி மேலாளர் சுஜாதா சம்பவ இடம் வந்து பார்வை யிட்டார்.
பின்னர் சி.சி.டி.வி. காமிரா பதிவுகளையும் பார்வையிட்டார். அதில் 2 பேர் நள்ளிரவில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து பார்வை யிட்டனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்தை பார்த்தனர். சேதமடைந்த ஏ.டி.எம். மையம் குறித்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த 2 பேர் மது போதையில் இருப்பது போல் தெரிந்தது. அவர்கள் யார்? எதற்காக இந்த காரியத்தில் ஈடுபட்டார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தக்கலை கூட்ட மாவு பகுதியைச் சேர்ந்த அகில் (24), பிரதீப் (25) 2 பேர் மது போதையில் ஏ.டி.எம். மையத்தை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் ஆதார் வைத்துள்ளார்களா என ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:41:07 PM (IST)

சுசீந்திரம் குளத்தில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை : ஆட்சியர் உத்தரவு
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:17:29 PM (IST)

தங்க நகை கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதி ஏழைகள் நலனுக்கு எதிரானது: விஜய் வசந்த்
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:14:23 PM (IST)

கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 3:19:25 PM (IST)
