» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரயில் நிலையத்தில் பிரிபெய்ட் ஆட்டோ, டாக்சி அனுமதி: ஆலோசனைக்குழு உறுப்பினர் தகவல்!

செவ்வாய் 4, மார்ச் 2025 4:09:57 PM (IST)

நாகர்கோவில் சந்திப்பு டவுன் ரயில் நிலையத்தில் பிரிபெய்ட் ஆட்டோ, டாக்சி திட்டம் துவங்க ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கவுள்ளதாக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்ட ரயில் பணிகள் சங்கம்  தலைவர் மற்றும் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட வணிக மேலாளர் செல்வினை கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவரும், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினருமான எஸ்.ஆர். ஸ்ரீராம் செயலாளர் மோகன் மற்றும் ஐயப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து நாகர்கோவில் சந்திப்பு மற்றும் டவுண் ரயில் நிலையத்தில் பிரிபெய்ட் ஆட்டோ, டாக்சி உடன் துவங்க கோரிக்கை மனு சமர்பித்தனர்.

அதுபோன்று தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர், வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் மனுக்கள் அனுப்பியுள்ளனர். அதில் குறிப்பிட்டுள்ளதாவது  நாகர்கோவில் சந்திப்பு மற்றும் டவுண் ரயில் நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

இவர்கள் தங்கள் இடங்களுக்கு செல்ல ஆட்டோ, டாக்சியில் செல்ல விரும்பி செல்லும் பொழுது அவர்கள் தங்கள் விருப்பம் போல கட்டணம் வசூலிக்கின்றனர், ரிட்டன் சவாரி சேர்த்து கேட்கின்றனர். இரவில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் பயணிகள் மிகவும் அவதியுறுகின்றனர்.

இதனை தவிர்க்க சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் இதர மாநிலங்களிலும் பிரிபெய்ட் ஆட்டோ, காவல்துறை ஒத்துழைப்புடனும், போக்குவரத்து துறை ஒத்துழைப்புடனும் மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இதில் உள்ள ஊழியர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை கொடுக்க ரசீது கொடுக்கின்றனர். இதனால் கூடுதல் கட்டணம் பயணிகளிடம் வாங்காமல் செல்லும் நிலை அங்கும் உள்ளது.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் சந்திப்பு டவுண் மற்றும் கன்னியாகுமரிக்கு வரும் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் பலன் பெறுவார்கள். ஆதலால் உடனடியாக ரயில்வே நிர்வாகம் இதற்கான அனுமதியளித்து, ரயில் நிலையங்கள் முன்பு பிரிபெய்ட் ஆட்டோ. டாக்சி பூத் உடன் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம் என தமது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்று விரைவில் நாகர்கோவில் சந்திப்பு, டவுண் ரயில் நிலையங்களில் அரசு ஆட்டோ கட்டணம் நிர்ணயித்தவுடன் பூத் அமைக்கவும், அரசு நிர்ணயித்த கட்டணமே டிரைவர்கள் வசூலிக்க திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் செல்வின் அனுமதி அளித்துள்ளார்.
இத்தகவலை ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory