» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

செவ்வாய் 4, மார்ச் 2025 12:42:11 PM (IST)



குருந்தன்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்பட்டு வரும் குருந்தன்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (04.03.02025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் நோயாளிகளின் வருகை பதிவேடு, அலுவலக பதிவேடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

மருத்துவமனையின் உள்நோயாளிகளுக்கு விரிக்கப்பட்ட படுக்கை விரிப்புகளை தினமும் மாற்றும் வேண்டும் எனவும், வார்டுகளின் தரை மற்றும் சுவர்பகுதியில் கறைகள் இல்லாதவாறு தினமும் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அக்கறையுடனும், பரிவுடனும் நடந்து கொண்டு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் கர்ப்பிணி பெண்களுக்கென்ற பிரத்தியேக நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை முறைகள் குறித்தும், மேலும் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை, கர்ப்பிணி பெண்களுக்கு செய்யப்பட்ட ஸ்கேன் சேவைகள், ஆய்வக பரிசோதனைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், இரத்த சோகை வராமல் தடுப்பதற்கு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறா என்பது குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது என ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory