» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: 8 பேர் கைது!
செவ்வாய் 4, மார்ச் 2025 11:12:31 AM (IST)

குமரியில் பத்திரிக்கை நிருபர்கள் எனக்கூறி நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டம், புதுக்கடை பகுதியில் ஜஸ்டின் ராஜ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் பத்திரிக்கை நிருபர்கள் என்றுக்கூறி, நிதி நிறுவனத்தில் அதிகப்படியான வட்டி வாங்குவதாக புகார் வந்துள்ளது,இது தொடர்பாக பத்திரிக்கையில் அவதூறு செய்தி வெளியிடாமல் இருக்க ஒரு லட்ச ரூபாய் தரவேண்டும் எனக்கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் கொடுக்க மறுத்த ஜஸ்டின் ராஜ்யை அச்சுறுத்தி சட்டை பையில் இருந்த ரூ.5ஆயிரத்தை எடுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஜஸ்டின் ராஜ் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரத்தை சேர்ந்த ஆன்றனி (51), கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த சுனில் (33), கருவாவிலை பகுதியை சேர்ந்த லால் (36), ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த செல்வராஜா (37), கன்னியாகுமரியை சேர்ந்த சுரேஷ் கோபி (52), திருவட்டார் பகுதியை சேர்ந்த பெல்வின் ஜோஸ் (41), கீழபெருவிளை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (38) மற்றும் சின்ன முட்டம் பகுதியை சேர்ந்த சகாய போஸ்கோ (58) ஆகியோர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர்.
இது போன்று மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் ஆதார் வைத்துள்ளார்களா என ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:41:07 PM (IST)

சுசீந்திரம் குளத்தில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை : ஆட்சியர் உத்தரவு
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:17:29 PM (IST)

தங்க நகை கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதி ஏழைகள் நலனுக்கு எதிரானது: விஜய் வசந்த்
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:14:23 PM (IST)

கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 3:19:25 PM (IST)
