» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மார்ச் 5ல் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் : ஆன்லைனில் பதிவுசெய்யலாம்!
திங்கள் 3, மார்ச் 2025 3:47:48 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 5ஆம் தேதி பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 5ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற இருக்கின்றது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கங்கைகொண்டான் டாடா பவர், போஷ் நிறுவனம், ஃப்ளோ குளோபல், ஆழ்த்தி சொலுஷன்ஸ், ர்-ஷெல் பிசினஸ் சொலுஷன்ஸ், பிடிம் டெக்னாலஜிஸ், ஃகிலோவின் டெக்னாலஜிஸ் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள உள்ளார்கள்.
குறிப்பாக டாடா பவர் நிறுவனம் Diploma/BE (EEE, ECE, Mech), BSC (Maths, Physics, chemistry), ITI (Any stream) 50-60 நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளார்கள். போஷ் நிறுவனம் Company Trainee - 10th, 12th and ITI NAPS Trainee - 12th & ITI, Team Captain -Diploma (ECE, EEE, MECH) Logistics BE Mech, Maintenance - Diploma - EEE/ECE -Trainer, BE/ME- Mech Nurse - Diploma Nursing Quality -Diploma in Mech ஆகிய படிப்புகளில் இருந்து சுமார் 15 நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளது. BOSCH நிறுவனம் மாற்றுத்திறன் மாணவர்களையும் தேர்வுசெய்ய உள்ளார்கள் மற்ற நிறுவனங்கள் BE ECE, CSE, EEE பயின்ற சுமார் 15-20 நபர்களை ஒவ்வொரு நிறுவனமும் தேர்ந்தெடுக்க உள்ளார்கள்.
TATA பவர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஆன்லைன் தேர்வு நடத்த உள்ளதாகவும் இதற்கு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்கள் தயாராக வரவேண்டும். இந்த முகாமின் முன்பதிவு https://bit.ly/raiseupkk என்ற இணையத்தளத்தில் பதிவுசெய்யலாம்.
மற்றபடி கலந்துக்கொள்பவர்கள் காலை 9:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்றைய தினம் அமைக்கப்பட்டுள்ள பதிவு மையத்தில் பதிவு செய்யவேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாணவிகள் மற்றும் வேலை தேடுகின்ற இளைஞர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொள்கிறார்.
மக்கள் கருத்து
MadhubalaMar 4, 2025 - 11:24:31 AM | Posted IP 104.2*****
A great opportunity for students and job seekers to gain experience and grow in their careers.
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் ஆதார் வைத்துள்ளார்களா என ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:41:07 PM (IST)

சுசீந்திரம் குளத்தில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை : ஆட்சியர் உத்தரவு
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:17:29 PM (IST)

தங்க நகை கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதி ஏழைகள் நலனுக்கு எதிரானது: விஜய் வசந்த்
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:14:23 PM (IST)

கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 3:19:25 PM (IST)

saraswatyMar 4, 2025 - 06:36:30 PM | Posted IP 104.2*****