» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம்!
ஞாயிறு 2, மார்ச் 2025 11:03:39 AM (IST)

புதுக்கடை அருகேஆலய திருவிழாவில் தேரோட்ட முன்னேற்பாட்டில் ஏணி மீது மின்சாரம் பாய்ந்து 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள இனையம்புத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் திருப்பலி, சிறப்பு ஆராதனை போன்றவை நடைபெற்று வந்தது. இதில் அந்த கிராம மக்கள் அனைவரும் குடும்பம், குடும்பமாக கலந்து கொண்டனர். திருவிழாவின் 11-வது நாளான நேற்று இரவு தேர் பவனி நடைபெறுவதாக இருந்தது.
இதையொட்டி நேற்று மாலையில் ஆலய வளாகத்தில் பங்கு மக்கள் பலர் கூடியிருந்தனர். அவர்கள் ஆலயத்தின் சுற்றுப்புற வளாகத்தில் தேர் செல்வதற்கு இடையூறாக உள்ள பொருட்களை அப்புறப்படுத்த முடிவெடுத்தனர். ஆலய வளாகத்தில் ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஏணி உயரத்தை கூட்டி குறைக்கும் வசதி கொண்டது ஆகும்.
நேற்று மாலை 5.45 மணியளவில் இனையம்புத்தன்துறையை சேர்ந்த விஜயன் (52), ஜஸ்டஸ் (33), அருள் சோபன் (45), மைக்கேல் பின்றோ (40) ஆகிய 4 பேரும் ஏணியை நகர்த்தி தேர் செல்லும் பாதையை சீர் செய்வதற்காக ஆலயத்தின் முன்பகுதியில் இருக்கும் சாலைக்கு கொண்டு வந்தனர். அந்த சாலையின் ஓரத்தில் உயரழுத்த மின்கம்பி இருந்தது.
இவர்கள் 4 பேரும் ஏணியை நகர்த்தி கொண்டு வந்த போது எதிர்பாராமல் உயர் அழுத்த மின்கம்பி மீது ஏணி உரசியது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் ஏணி வழியாக 4 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 4 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தனர். இதை ஆலய வளாகத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மின்சாரம் தாக்கியதில் 4 பேரின் உடல் கருகி கொண்டிருந்த நிலையில் சுற்றி நின்றவர்கள் ஆபத்தை உணர்ந்து அருகில் செல்லவில்லை.
உடனடியாக இதுபற்றி மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் 4 பேரின் உடல்களையும் பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆலய விழாவில் நேற்று இரவு நடைபெற இருந்த தேர் பவனி ரத்து செய்யப்பட்டது.
மின்சாரம் தாக்கி இறந்த 4 பேரும் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். ஆலய திருவிழாவில் 4 பேர் இறந்ததால் அந்த கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் தகவல் அறிந்த விஜய் வசந்த் எம்.பி. நேற்று இரவு இனையம்புத்தன்துறை கிராமத்துக்கு சென்றுஇறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் ஆதார் வைத்துள்ளார்களா என ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:41:07 PM (IST)

சுசீந்திரம் குளத்தில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை : ஆட்சியர் உத்தரவு
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:17:29 PM (IST)

தங்க நகை கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதி ஏழைகள் நலனுக்கு எதிரானது: விஜய் வசந்த்
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:14:23 PM (IST)

கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 3:19:25 PM (IST)
