» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தோவாளை, திருவட்டார் பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
சனி 1, மார்ச் 2025 5:22:48 PM (IST)

தோவாளை மற்றும் திருவட்டார் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்துக்குட்பட்ட செண்பகராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள தென்னை மதிப்புக்கூட்டுதல் மையம், திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட குலசேகரம் பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரி ரப்பர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (01.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் -
தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தோவாளை வட்டத்துக்குட்பட்ட செண்பகராமன் புதூரில் தமிழ்நாடு அரசு வேளாண் வணிகத்துறை மற்றும் வேளாண் விற்பனைக்குழு நிதியுதவியுடன் ரூ.16 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தென்னை மதிப்பு கூட்டுதல் மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த மதிப்பு கூட்டு மையத்தில் இயல்பு நிலை தேங்காய் எண்ணெய் எடுக்கும் அலகு, உலர் தேங்காய் பொடி தயாரிக்கும் அலகு மற்றும் மரச்செக்கு அலகுகளை ஆய்வு செய்து அனைத்து அலகுகளையும் முழு அளவில் செயல்படுத்திட துறை சாரந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இம்மதிப்புக்கூட்டுதல் மையத்தை சிறப்பாக செயல்பட அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தோவாளை வட்டத்திற்குட்பட்ட ஆரல்வாய்மொழியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் கிராம அறிவு மையம் அமைத்திட இடம் பார்வையிடப்பட்டது. கிராம அறிவுசார் மையம் தாட்கோ மூலம் கட்டப்பட உள்ளது.
அதனைத்தொடர்ந்து திருவட்டார் வட்டம் குலசேகரம் ஒழுங்கும முறை விற்பனைக் கூட வளாகத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி ரப்பர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டதோடு, ரப்பர் சீட்கள் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் ரப்பர் நர்சரி மூலம் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டுள்ள ரப்பர் பால் எடுக்கும் உபகரணங்கள் மற்றும் ரப்பர் உலர்ப்பான் ஆகியவை நேரில் பார்வையிட்டு அய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் ரப்பர் ரோலர் மூலம் ரப்பர் சீட்டு தயாரிக்கும் செயல்முறை விளக்கம் குறித்தும், ரப்பர் கொள்முதலில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து பொன்மனை பெருவிளைகிடவு குளத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2024 -2025 ஆன கூட்டுக்குளம் மேம்பாடு செய்தல் பணி ரூ.34 இலட்சம் மதிப்பில் 108 மீட்டர் நீளம் நான்கு மீட்டர் உயரத்திற்கு நடைபெற்றுவரும் பணிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் திற்பரப்பு அருவி ஒன்றாகும். இவ்வருவி நாகர்கோவிலிருந்து 42 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் திற்பரப்பு அருவிக்கு அதிகளவில் வருகை புரிகின்றனர். தற்போது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ரூ.4.30 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உடைமாற்றும் அறை, கழிவறைகள், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இன்றைய ஆய்வில் பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் கழிப்பறைகள் தற்காலிகமாக ஏற்படுத்தி சுற்றா பயணிகளுக்கு இடையூறு இல்லமால், அனைத்து பணிகளையும் ஜூன் மாதத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் திருக்கோவில் சுற்றுச்சுவர்களில் உள்ள புதர்களை அகற்றி வர்ணம் பூசி வண்ண ஓவியங்கள் தீட்டி அழகுபடுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.
ஆய்வில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ஜெங்கின் பிரபாகர், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், துணை இயக்குநர் கீதா (வேளாண்மை வணிகம்), விற்பனை குழு செயலாளர் விஷ்ணப்பன், உதவி பொறியாளர் விஜில்சிங், திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், திற்பரப்பு பேரூராட்சி தலைவர், ரப்பர் உற்பத்தியாளர் குழு தலைவர் பிரதீப், ரப்பர் உற்பத்தியாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் ஆதார் வைத்துள்ளார்களா என ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:41:07 PM (IST)

சுசீந்திரம் குளத்தில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை : ஆட்சியர் உத்தரவு
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:17:29 PM (IST)

தங்க நகை கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதி ஏழைகள் நலனுக்கு எதிரானது: விஜய் வசந்த்
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:14:23 PM (IST)

கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 3:19:25 PM (IST)
