» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிளஸ் 2 பொதுத் தேர்வு வழிமுறைகள், பாதுகாப்பு பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆலோசனை

சனி 1, மார்ச் 2025 10:56:07 AM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் நடைபெறவுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எதிர்கொள்வது குறித்து பள்ளிகல்வித்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை சார்பில் வரும் 03.03.2025 அன்று முதல் நடைபெறவுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை நடத்துவது குறித்து அலுவலர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன் தெரிவிக்கையில்- தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் வருகிற மார்ச் மூன்றாம் தேதி முதல் தொடங்கி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுகளை எவ்வித புகாருக்கும் இடம் இன்றி சிறப்பாக நடத்துவதை துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

முக்கியமாக பொதுத்தேர்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், தேர்வு கால கட்ட பாதுகாப்புகள், பாதுகாப்புடன் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு மையத்தை அணுகுவதற்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தருதல், தேர்வு மையங்களில் எவ்வித சலனமும் இன்றி மாணவர்கள் தெளிவாக தேர்வினை எதிர்கொள்ள தேவையான வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.

மேலும் பொதுத்தேர்வு எழுத வரும் மாணவ மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீர், தங்குதடையின்றி மின்சாரம், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான வசதி, முதலுதவி வசதி உள்ளிட்டவைகள் வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வினாத்தாள்களை பாதுகாப்புடன் தாமதமின்றி எடுத்து செல்வதை உறுதி செய்வதோடு, பொதுத்தேர்வு பணியில் ஈடுபடவுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் முழு விவரங்களை தெரிவித்து தயார்படுத்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory