» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குளிர்பானம் என நினைத்து மண்எண்ணெய் குடித்த 2 வயது குழந்தை சாவு: பளுகல் அருகே சோகம்

சனி 1, மார்ச் 2025 9:13:44 AM (IST)

பளுகல் அருகே குளிர்பானம் என நினைத்து மண்எண்ணெய் குடித்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

குமரி மாவட்டம் பளுகல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட செறுவல்லூர் தேவிகோடு பனச்சக்காலை பகுதியை சேர்ந்தவர் அனில் (38), மாங்காய் பறிக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி அருணா. இந்த தம்பதிக்கு அனிருத் (5), ஆரோன் (2) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அனில் ஒரு தோட்டத்தில் மரத்தில் ஏறி மாங்காய் பறித்த போது தவறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. அன்று முதல் அவர் எழுந்து நடக்க முடியாமல் உள்ளார். அவரை மனைவி அருணா உடனிருந்து கவனித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் அனிலுடன், அருணா பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஆரோன் வீட்டுக்குள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தான்.

அப்போது சமையல் அறைக்குள் சென்ற ஆரோன், நாற்காலியில் ஏறியபடி அங்கிருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்துள்ளான். பின்னர் குளிர்பானம் என நினைத்து அதனை திடீரென குடித்து விட்டான். இதனை குடித்த சிறிது நேரத்தில் குழந்தை அலறி துடித்தது. மேலும் பாட்டிலில் இருந்த மண்எண்ணெய்யும் சிந்தியது. சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அருணா, குழந்தையிடம் இருந்து மண்எண்ணெய் வாசம் வருகிறதே? என சந்தேகம் அடைந்தார். அப்போது குழந்தையும் திடீரென வாந்தி எடுத்தது. இதனால் அவர் பதறி போனார். 

எனவே குழந்தை மண்எண்ணெய் தான் குடித்து விட்டது என உறுதி செய்த அருணா, உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக காரக்கோணம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆரோன் பரிதாபமாக இறந்தான். இது சோகத்தை ஏற்படுத்தி உள்–ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory