» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது!

வெள்ளி 28, பிப்ரவரி 2025 5:55:17 PM (IST)



கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் தூத்தூர் மண்டலத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் எனவும், காச்சா மூச்சா எனப்படும் மூன்றடுக்கு செவுள் வலையினை கொண்டு மீன்பிடித்தலை அனுமதிக்க கேட்டும், மணக்குடி மீனவக் கிராம தூண்டில் விசைப்படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்களை சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் தங்கு தடையின்றி விற்பனை செய்திட தனி இடம் அமைத்துதர கேட்டும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டைமடி கொண்டு மீன்பிடி தொழில் புரிவதை நிரந்தரமாக தடைசெய்திட கேட்டும் மேல்மிடாலம் கூட்டுறவு சங்கத்தில் உள்ள மீனவ பயனாளிகளுக்கு திட்டங்களில் பயன்பெற ஆதார் அட்டையிலுள்ள குறைபாடுகளை களைந்திட கேட்டும் கடலில் விபத்துக்குள்ளாகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை விரைந்து அமல்படுத்திட கேட்டும், 

கேரள மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக பதிவு பெற்ற விசைப்படகுகளை வருடாந்திர ஆய்வு செய்ய கேட்டும், மேல்மிடாலம் மீனவ கிராமத்தில் இலவச வீடு திட்டத்தில் மீனவர்களுக்கு வீடு வழங்கிட கேட்டும், ஆந்திரா மாநிலத்தை போன்று 60 வயதினை கடந்த மீனவர்களுக்கும் மாதம் ரூ.4000 ஓய்வூதியம் மீனவர் நலவாரியம் மூலம் வழங்கிட கேட்டும் பேரிடர்களிலிருந்து தற்காத்துக் கொள்ள குமரி மீனவர்களுக்கு ரேடியோ டெலிபோன் வழங்கிட கேட்டும் புயல், கடல்சீற்றம் போன்ற முன்னெச்சரிக்கைகளை நுட்பமாகக் கணக்கிட்டு அறிவிக்கவும், 

மேலும் எச்சரிக்கை காலங்களில் தொழிலுக்குப் போகாமலிருக்கும் மீனவர்களுக்கு தினப்படி வழங்கிட கேட்டும் பாரம்பரிய நாட்டுப்படகு வெளிப்பொருத்தும் இயந்திரங்களுக்கு மாதம் 500 லிட்டர் மானிய மண்ணெண்ணெய்யாக உயர்த்தி வழங்கிட கேட்டும் மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை வழங்கிடும் காலங்களுக்கு நிவாரண உதவியும, 

மீனவ குடும்பங்களுக்கு ரூ.21000 நிவாரணம் உயத்தி வழங்கிட கேட்டும் மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டிட கேட்டும் தகுதியான Pஆ கிசான் திட்டத்திலிருந்து விலகிய தகுதியான மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால மற்றும் குறைந்த கால நிவாரணம் வழங்கிட கேட்டும் தேங்காய்பட்டண மீன்பிடி துறைமுக இரையுமன்துறை பகுதியில் நடைபெற்று வந்த படகு அணையும் தளத்தின் கட்டுமான பணியினை மீண்டும் தொடங்கி விரைந்து முடித்திட கேட்டும் மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளுக்கு தேசிய பதிவு வழங்கிட கேட்டும் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மீனவர் ஆலோசனை குழு அமைத்து தர கேட்டும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மீன்வள அமலாக்க பிரிவு, கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகியவற்றிற்கு கடலில் மீன்பிடி செயல்பாடுகளை ஆய்வு செய்திடவும், பாதுகாப்பு பணிக்காகவும் விசைப்படகு மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகு வழங்கிட கேட்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) கன்னியாகுமரி மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் பதில் விவரம் தெரிவிக்கப்பட்டது. தூத்தூர் மண்டலத்தில் புதிய மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் அமைப்பது தொடர்பாக களஆய்வு செய்த பின்னர் இதுகுறித்து கருத்துரு தயார் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், தற்போது தூத்தூர் மண்டலத்தில் மீனவர் நலன் சார்ந்த திட்டங்களை துரிதப்படுத்திட இரையுமன்துறை மற்றும் தூத்தூர் கிராமத்தில் மீன்வள ஆய்வாளர் பணியிடமும் வள்ளவிளை கிராமத்தில் ஒரு மீன்வள சார்ஆய்வாளர் பணியிடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு மீன்வள ஆய்வாளர் மற்றும் சார் ஆய்வாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது என்றும் கேட்டுக்கொண்டார்கள்.

மேலும் காச்சா மூச்சா எனப்படும் மூன்றடுக்கு செவுள் வலையினை கொண்டு மீன்பிடிப்பது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பத்மநாபபுரம் தலைமையில் இது குறித்து கூட்டம் நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும் என்றும் மணக்குடி மீனவ கிராமத்தை சார்ந்த தூண்டில் விசைப்படகு மூலம் பிடிக்கப்படும் மீன்களை சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் தங்கு தடையின்றி விற்பனை செய்திட தனி இடம் அமைத்துதர இழுவலை படகு சங்க நிர்வாகிகள் மற்றும் மணக்குடி தூண்டில் விசைப்படகுகளுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் 

இரட்டைமடி கொண்டு மீன்பிடி தொழில் புரிவோரை தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் மற்றும் விதிகள் 2020-ன் படி களஆய்வு மேற்கொண்டு சட்டத்தினை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேல்மிடாலம் மீனவர் கூட்டுறவு சங்க பயனாளிகள் மீன்வள திட்டங்களில் பயன்பெற ஆதார் அட்டை குறைபாடுகளை களைந்திட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சிறப்பு முகாம்கள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கடலில் விபத்துக்குள்ளாகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தினை கேரள மாநிலத்தில் செயல்படுத்திடுவது போன்று கருத்துரு தயார் செய்து அரசுக்கு அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் 

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தேங்காய்பட்டணம் அலுவலக கட்டுபாட்டிலுள்ள, கேரள மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகளை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்திட கேரள மாநில மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை இயக்குநர் அவர்களுக்கு சென்னை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அவர்களால் கடிதம் அனுப்பப்பட்டு விசைப்படகுகள் தற்போது வருடாந்திர ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றும் 

மேல்மிடாலம் மீனவ கிராமத்தில் இலவச வீடு திட்டத்தில் மீனவர்களுக்கு வீடு வழங்கிட களஆய்வுக்கு பின் தமிழக அரசு வழிகாட்டுதலுக்குட்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆந்திரா மாநிலத்தை போன்று 60 வயதினை கடந்த மீனவர்களுக்கும் மாதம் ரூ.4000 ஓய்வூதியம் மீனவர் நலவாரியம் மூலம் வழங்கிடுவது தொடர்பாகவும் பேரிடர்களிலிருந்து தற்காத்துக் கொள்ள குமரி மீனவர்களுக்கு ரேடியோ டெலிபோன் வழங்கிடுவது வானிலை எச்சரிக்கை காலங்களில் மீன்பிடி தொழிலுக்கு செல்லாத மீனவர்களுக்கு தினப்படி வழங்கிடுவது பாரம்பரிய நாட்டுப்படகு வெளிப்பொருத்தும் 

இயந்திரங்களுக்கு மாதம் 500 லிட்டர் மானிய மண்ணெண்ணெய்யாக உயர்த்தி வழங்கிடுவது மற்றும் மீன்பிடி தடைக்கால காலங்களில் மீனவ குடும்பங்களுக்கு ரூ.21000 நிவாரணம் உயர்த்தி வழங்கிடுவது தொடர்பாக கருத்துரு தயார் செய்து அரசுக்கு அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டிட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் Pஆ கிசான் திட்டத்திலிருந்து விலகிய தகுதியான மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால மற்றும் குறைந்த கால நிவாரணம் வழங்கிட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தேங்காய்பட்டண மீன்பிடி துறைமுக இரையுமன்துறை பகுதியில் நடைபெற்று வந்த படகு அணையும் தளத்தின் கட்டுமான பணியினை தொடங்கி விரைந்து முடித்திட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

என்றும் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் மற்றும் விதிகள் 2020-ன் படி மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுக்கு தேசிய பதிவு வழங்கிட இயலாது என்றும் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மீனவர் ஆலோசனை குழு அமைத்திட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் சென்னை அவர்களுடன் கலந்து ஆலோசித்து இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மீன்வள அமலாக்க பிரிவு, கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகியவற்றிற்கு கடலில் மீன்பிடி செயல்பாடுகளை ஆய்வு செய்திடவும், பாதுகாப்பு பணிக்காகவும் விசைப்படகு மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகு வழங்கிட துணை இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை (மண்டலம்) கன்னியாகுமரி மூலம் கருத்துரு அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பதில் விவரம் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, நாகர்கோவில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன், மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், துறை அலுவலர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory