» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் புதிய மினி பஸ் வழித்தடம்: பொதுமக்களிடம் ஆட்சியர் கருத்துகேட்பு!

புதன் 26, பிப்ரவரி 2025 5:26:38 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய மினி பேருந்து வழித்தடம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பொதுமக்களை நேரில் சந்தித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டார்

கன்னியாகுமரி மாவட்டம் வட்டார போக்குவரத்து துறை சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள மினிபேருந்து விரிவான திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (26.02.2025) விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட ஊற்றுக்குழி மற்றும் அம்பல நடைதிருப்பு பொதுமக்களை நேரில் சந்தித்து கருத்து கேட்டு தெரிவிக்கையில்- 

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பெற்ற நாளிலிருந்து அனைத்து தரப்பட்ட மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் தமிழ்நாடு போக்குவரத்து துறை மூலமாக பேருந்து செல்ல முடியாத பகுதிகளுக்கும் புதிய பேருந்து வழித்தடம் அமைத்து பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் சிரமமில்லமால் பயணித்து வருகின்றனர்.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட துவாராகபதி கோவில் முதல் சின்னமுட்டம் சர்ச் வரை, ஜேப்பியார் மீன்பிடி துறைமுகம் முதல் புனித ஜார்ஜியார் தெரு பி.எட் கல்லூரி வரை, அண்ணா பேருந்து நிலையம் முதல் பூதப்பாண்டி காவல்நிலையம் வரை, அண்ணா பேருந்து நிலையம் முதல் புத்தன்துறை வரை, கணபதிபுரம் முதல் அண்ணா பேருந்து நிலையம் வரை, அழிக்கால் முதல் அண்ணா பேருந்து நிலையம் வரை, அண்ணா பேருந்து நிலையம் முதல் மணக்குடி தூய அந்திரேயா ஆலயம் வரை, சுனாமி காலனி மணக்குடி முதல் வடசேரி பேருந்து நிலையம் வரை, அண்ணா பேருந்து நிலையம் முதல் ஈத்தாமொழி சிவா மருத்துவமனை வரை, டவுண் இரயில் நிலையம் முதல் கீழசரக்கல்விளை ஜங்சன் வரை ஆகிய 10 இடங்களில் புதிய வழித்தடங்கள் சேர்க்கப்பட்டது மட்டுமின்றி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து பல சேவைகள் தொடங்கப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்களும் வட்டார போக்குவரத்து அலுவலகம் வாயிலாக பெறப்பட்டு வருகின்றன.

மேலும் பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் மினிபேருந்துககள் இயக்கப்படவுள்ளது. இதன் வாயிலாக பொதுமக்கள் தங்கள் அத்தியாவசியப்பணிகளுக்கு சென்று வரவும், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் எந்தவித சிரமமின்றி படிக்கவும் முடியும் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார். ஆய்வில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, துறை அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory