» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
புத்தகத் திருவிழாவில் ரூ.10,00க்கு மேல் புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு பரிசு : ஆட்சியர் தகவல்!
புதன் 26, பிப்ரவரி 2025 12:47:39 PM (IST)

6வது மாபெரும் புத்தகத் திருவிழாவில் ரூ.1000க்கும் மேற்பட்ட மதிப்பில் புத்தகம் வாங்கும் வாசிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டவுள்ளார்கள் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத்திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 19.02.2025 அன்று துவக்கி வைத்தார்கள்.
நேற்று பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களின் கலைப்போட்டிகள் மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து உதவி இயக்குநர் ஊராட்சிகள் சிதம்பரம் வரவேற்புரையாற்றினார்கள். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமையுரையாற்றினார்கள்.
தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் சு.ஜெயக்குமாரி "பாரதி பார்வையில் பெண்" கவிஞர் நெல்லை ஜெயந்தா " சில நேரங்களில் சில புத்தகங்கள்" என்ற தலைப்பிலும், கன்னியாகுமரி உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் முல்லை செல்லத்துரை "திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் விழுமியங்கள்" என்ற தலைப்பிலும், எழுத்தாளர் இரையுமன் சாகர் "நெய்தல் வாழ்வும் எழுத்தும்” என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினார்கள்.
மேலும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, வெளியீட்டுள்ள செய்திக் குறிப்பில் ரூ.1000க்கு மேல் புத்தகம் வாங்கும் வாசகர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, புத்தக கண்காட்சியின் நிறைவு நாளில் 01.03.2025 (சனிக்கிழமை) அன்று அவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கபடவுள்ளனர்.
அனைத்து பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் இளைஞர்கள், பள்ளி கல்லூரி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவர்கள் அதிகளவில் புத்தகங்களை வாங்கி வாசிப்புத்திறனை அதிகரித்து கொள்வதோடு, 6வது மாபெரும் புத்தகக்கண்காட்சியினை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் ஆதார் வைத்துள்ளார்களா என ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:41:07 PM (IST)

சுசீந்திரம் குளத்தில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை : ஆட்சியர் உத்தரவு
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:17:29 PM (IST)

தங்க நகை கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதி ஏழைகள் நலனுக்கு எதிரானது: விஜய் வசந்த்
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:14:23 PM (IST)

கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 3:19:25 PM (IST)
