» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை!!

புதன் 22, ஜனவரி 2025 7:48:07 PM (IST)



விளாத்திகுளம் அருகே ஆபத்தான நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையில், படர்ந்தபுளி கிராமத்தின் அருகில் சாலை முற்றிலும் பெயர்ந்து பல மாதங்களாக குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது. 

இத்தகைய மிக மோசமான சாலையில் பகலில் வாகனங்களை ஓட்டிச் செல்வதே மிகப்பெரிய சவாலாக இருந்து வரும் நிலையில், மின் விளக்குகள் இன்றி காணப்படும் அப்பகுதியில் இரவில் சாலையை கடந்து செல்வதென்பது கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு ஆபத்தான சூழ்நிலையில்தான் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். 

தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த படுமோசமான சாலையில், நாளொன்றுக்கே ஏராளமான வாகன விபத்துக்கள் ஏற்படுவதில் கை, கால் முறிவு, உயிர் பலி என தொடர்ந்து வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வரும் சூழ்நிலையில், இதனை சரிசெய்ய ஆட்சியாளர்களும் முன்வரவில்லை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அலட்சியபோக்கிற்கும் குறைவில்லை என்ற நிலைதான் நீடித்து வருகிறது.

அதிகப்படியான விபத்துக்களுக்கு காரணமாக இருந்துவரும் இந்த சேதமடைந்த ஆபத்தான சாலையை சற்றும் கால தாமதபடுத்தாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் உயிர் பாதுகாப்பு கருதி உடனடியாக சாலையை சீரமைப்பு செய்வதோடு மட்டுமின்றி, மின்விளக்கு வசதி ஏற்படுத்தி அங்கு "விபத்து பகுதி" என எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. 

இனியும்.கூட அதிகாரிகள் அவர்களது வழக்கமான அலட்சியப் போக்கையே கையாண்டால், இச்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி பல உயிர்கள் அனாமத்தாக போகும் மிகமோசமான நிலை தொடரத்தான் போகிறது என்பதை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கைக்கு துறைசார்ந்த அதிகாரிகளை முடுக்கி விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

ECRJan 22, 2025 - 08:25:09 PM | Posted IP 162.1*****

ecr road romba mosama irukku ..... many roads in thoothukkudi very very worst condition...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory