» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிறிஸ்துமஸ் நாளில் கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு: குமரியில் சோகம்!
வியாழன் 26, டிசம்பர் 2024 10:28:44 AM (IST)
குமரியில் கிறிஸ்துமஸ் நாளில் கடலில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ் மகன் ஹார்லின் டேவிட்சன் (15). பள்ளி மாணவரான இவர் நேற்று வீட்டருகே உள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஹார்லின் டேவிட்சன் உட்பட 3 சிறுவர்களை திடீரென ராட்சத அலை இழுத்து சென்றது.
இதனைப் பார்த்த மீனவர்கள் உடனே கடலில் குதித்து இரண்டு சிறுவர்களை காப்பாற்றினார்கள். ஆனால் ஹார்லின் டேவிட்சனை மீட்க முடியவில்லை. தீவிர தேடுதலுக்கு பிறகு ஹார்லின் டேவிட்சனை பிணமாக மீட்டனர். இது குறித்து குளச்சல் மரைன் போலீசருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.