» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மதவாத சக்திகளை அனுமதிக்காத தமிழக மக்கள்: கிறிஸ்துமஸ் விழாவில் ரேவந்த் ரெட்டி பாராட்டு!

புதன் 25, டிசம்பர் 2024 12:30:46 PM (IST)



குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக மக்களை  பாராட்டுவதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசினார்.

தமிழக மக்களையும், கேரளா மக்களையும் நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் நீங்கள் மதவாத சக்திகளை இங்கு அனுமதிக்கவில்லை. இருமாநில மக்களும் மதவாத சக்திகளை முறியடிக்கிற சிறந்த மாநிலமாக உள்ளன. தெலுங்கானா மக்களும் தமிழ்நாடு, கேரளாவை பின்பற்றி வாழ நினைக்கிறோம் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக நேற்று கன்னியாகுமரி மாவட்டம் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 27வது கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. புண்ணியம் பகுதியில் இருந்து அருமனை வரை ஊர்வலம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேக் வெட்டினார். விழாவில் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசும்போது தமிழக மக்களை புகழ்ந்து தள்ளினார். அப்போது அவர் கூறியதாவது: நமது தலைவர் ராகுல்காந்தி நாட்டில் உள்ள தீய சக்திகளை எதிர்க்கிறார். அவர் உண்மையான அன்பையும், கிறிஸ்துமஸின் தன்மையையும் பிரதிபலிக்கக் கூடியவராக இருக்கிறார். உங்கள் அனைவருக்கும் தெரியும்.

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை இந்த கன்னியாகுமரி மண்ணில் இருந்து தொடங்கினார். இந்த மண்ணிற்கு சொந்தக்காரர்கள் நீங்கள். நான் கேரள மாநில மக்களையும், தமிழ்நாட்டு மக்களையும் நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் நீங்கள் மதவாத சக்திகளை இங்கு அனுமதிக்கவில்லை.

நம்முடைய ஒற்றுமையே நமக்கு பலமாக இருக்கிறது. அந்த ஒற்றுமையையே நம் நாட்டின் பலமாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களும், கேரள மக்களும் மதவாத சக்திகளை முறியடிக்கின்ற சிறந்த மாநிலமாக உள்ளன. தெலங்கானா மக்களும் கேரளா, தமிழ்நாட்டை பின்பற்றி வாழ விரும்புகிறோம்.

தெலுங்கானாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என அனைவரும் வசிக்கிறோம். காங்கிரஸ் கட்சி எனும் ஒரு குடையின் கீழ் ஒரே குடும்பமாக வாழ்கிறோம். தெலங்கானா அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஆதிவாசிகளுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது'' என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory