» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி – பாரமுல்லா தினசரி சூப்பர் பாஸ்ட் ரயில்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை

திங்கள் 23, டிசம்பர் 2024 4:34:50 PM (IST)

கன்னியாகுமரியிலிருந்து மதுரை, சென்னை வழியாக பாரமுல்லாவில் தினசரி சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பயணிகள் நலச்சங்கம் விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ண தேவி காத்ரா வாராந்திர ரயில் ஹிம்சாகர் என்ற பெயரில் 1984-ம் ஆண்டு முதல் வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் இந்தியாவின் தென் பகுதியில் கடைசி ரயில் நிலையமான கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு வடக்கே கடைசி ரயில் நிலையமான ஜம்முதாவி வரை இயக்கப்பட்டது. 

இந்த ரயில் அறிமுகப்படுத்திய காலகட்டத்தில் வடக்கே ஜம்முதாவி ரயில் நிலையம் தான் கடைசி ரயில் நிலையமாக விளங்கியது. அதன்பின்னர் ஜம்முதாவி – உதம்பூர் - வைஷ்ண தேவி காத்ரா ரயில் பாதை போக்குவரத்து தயார் செய்யப்பட்டதும் இந்த ரயில் 2015-ம் ஆண்டு முதல் இந்த ரயில் ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா வரை நீட்டிப்பு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி காத்ரா அடுத்து வடக்கு நோக்கி பாரமுல்லா வரை செல்ல ரயில் பாதை பணிகள் வேகமாக நடந்து வந்தன.

காஷ்மீர் மாநிலத்தில் ஜம்முவில் துவங்கி உதம்பூர், கட்ரா , ஸ்ரீநகர், காசிகுண்ட் வழியாக பாராமுல்லா வரை 338 கி.மீ தூரத்துக்கு இருப்பு பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதில் கடைசி பகுதியான ரியாசி முதல் பாரமுல்லா வரை பணிகள் முடிவுபெற்று ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

ஆனால் இடைப்பட்ட இடையே ரியாசி மற்றும் கத்ரா இடையே உள்ள கடைசி 17 கிலோ மீட்டர்கள் பணிகள் குகை மற்றும் பெரிய பால பணிகள் காரணமாக பணிகள் விரைந்து முடிக்க முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவு பெற்று அடுத்த மாதம் ஜனவரி மாதம் பயணிகள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. இந்த பாதை திறக்கப்பட்டதால் வடக்கே கடைசி ரயில் நிலையமான பாரமுல்லாவுக்கு இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலிருந்தும் நேரடியாக ரயிலில் பயணம் செய்ய முடியும்.

தற்போது தமிழ்நாட்டில் இருந்து ஜம்முவுக்கு கீழ்கண்டவாறு வாரத்திற்கு ஐந்து நாட்கள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

1. கன்னியாகுமரி - கத்ரா வாராந்திர ரயில் வழி திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு கோவை, சேலம், காட்பாடி, திருப்பதி வழி

2. திருநெல்வேலி - கத்ரா வாராந்திர ரயில் வழி மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம்,காட்பாடி,திருப்பதி வழி (இதற்கு முன்பு வாரத்துக்கு இரண்டுநாள் இயக்கப்பட்டது)

3. சென்னை சென்ட்ரல் - கத்ரா வாரம் மூன்று நாள் ரயில் வழி விஜயவாடா, புதுடில்லி

இதைப்போல் இதற்கு முன்பு இயக்கப்பட்டு வந்த மங்களூர் - கத்ரா வாராந்திர ரயில் ரத்து மற்றும் திருநெல்வேலி -கத்ரா வாரம் இருமுறை ரயில் வாராந்திர ரயிலாக குறைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களுக்கான மாற்று ரயில் வசதி வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

கன்னியாகுமரி – பாரமுல்லா தினசரி சூப்பர் பாஸ்ட் ரயில்:

கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை பாதை இருவழிபாதை பணிகள் முடிவு பெற்றுவிட்டன. இந்த நிலையில் இந்தியாவின் தெற்கே உள்ள கடைசி ரயில் நிலையமான கன்னியாகுமரியிலிருந்து வடக்கே கடைசி ரயில் நிலையமாக பாராமுல்லாவுக்கு தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர். 

கன்னியாகுமரியிலிருந்து பாரமுல்லாவுக்கு இந்த திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை, விஜயவாடா பாதை வழியாக தினசரி சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு தினசரி ரயில் இயக்கும் போது தற்போது தெற்கு ரயில்வே மண்டலங்களில் இருந்து வாரத்துக்கு ஐந்து நாள் இயக்கப்பட்டு வரும் ரயில்களை பாரமுல்லாவுக்கு நேரடி ரயில் இணைப்பு இல்லாத பகுதிகளிலிருந்து இயக்கலாம் என்ற ஆலோசனையும் வைக்கப்பட்டு உள்ளது.

இதன்படி மங்களுரிலிருந்து கோழிக்கோடு, கண்ணூர், கோவை, சேலம் வழியாக ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா வுக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரயிலை ரயில்வே துறை நிறுத்தி விட்டது எனவே இதற்கு மாற்றாக தற்போது இயக்கப்பட்டு வரும் கன்னியாகுமரி – கத்ரா ரயிலை திருவனந்தபுரம், எர்ணாகுளம், ஷொர்ணூர், கோழிக்கோடு, மங்களுர், கோவா, மும்பை வழியாக பாரமுல்லா வரை இயக்கலாம்.

இரண்டாவதாக கொங்கு பகுதிகளான கோவை, ஈரோடு, சேலம் பயணிகள் பயன்படும் வகையில் கோவையிலிருந்து பாரமுல்லா செல்வதற்கு வசதியாக கோயம்பத்தூர் - பாரமுல்லா வழி ஈரோடு, சேலம், காட்பாடி, திருப்பதி வழியாக வாராந்திர ரயில் இயக்கவேண்டும். 

மூன்றாவதாக தற்போது சென்னையிலிருந்து வாரத்துக்கு மூன்று நாள் ஸ்ரீமாதா வைஷ்ணதேவி கத்ரா செல்லும் ரயில் குறைந்தபட்சம் ஒருநாள் மட்டுமாவது தாம்பரம், விழுப்புரம், கடலூர், மைலாடுதுறை வழியாக ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இதைப்போல் இந்த ரயிலில் ஒருநாள் ரயிலை புதுச்சேரியிலிருந்து பாரமுல்லாவுக்குக இயக்க வேண்டும்.

இவ்வாறு இயக்கும் போது தெற்கு ரயில்வே மண்டலத்திலிருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் வடக்கே உள்ள கடைசி ரயில்நிலையமாக பாரமுல்லாவுக்கு நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும். - இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory