» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இந்துக்களின் கல்லறைகள் இடிப்பு: நகராட்சி ஆணையர் மீது இந்து முன்னணி குற்றச்சாட்டு!
திங்கள் 2, டிசம்பர் 2024 12:33:37 PM (IST)
காயல்பட்டினத்தில் இந்துக்களின் சமாதிகளை இடித்த நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார், திருச்செந்தூர் வட்டாட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், "காயல்பட்டினம் சிவன் கோவில் தெருவில் உள்ள இந்து சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் பல தலைமுறைகளாக சமாதிகளும் கல்லறைகளும் உள்ளன.
அந்த கல்லறைகளை ஜேசிபி இயந்திரம் மூலமாக 25.11.2024 அன்று எவ்வித முன் அறிவிப்பும் இன்றி காயல்பட்டிணம் நகராட்சி ஆணையர் உடைத்து தரைமட்டமாக ஆக்கியுள்ளார். இதனால் அப்பகுதியில் வாழும் இந்துக்கள் மனஅழுத்தத்தில் உள்ளனர். அவர்கள் முன்னோர்களை வருடத்திறக்கு ஒரு முறை வழிபாடு செய்ய இனி எங்கு செல்லுவார்கள் என்று பரிதவித்து உள்ளனர்.
மேற்படி அந்த இடம் அரசு புறம்போக்கு இடம். அந்த இடத்தில் தான்தோன்றி தனமாக இந்து சமாதிகளை உடைத்தது கண்டிக்கத்தக்கது. இந்து சமுதாய மக்கள் அனைவரும் காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பின்பு உடைக்கப்பட்ட அனைத்து சமாதிகளையும் உடனடியாக கட்டி தருகிறேன் என்று நகராட்சி ஆணையர் வாய் மொழியாக வாக்குறுதி அளித்துள்ளார்.
இது ஒரு அநீதிக்கு எடுத்துக்காட்டு. சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் நகராட்சி ஆணையர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
IndianDec 2, 2024 - 05:29:43 PM | Posted IP 162.1*****