» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஏரல் ஆற்றுப்பாலம் ரூ.6.95 கோடியில் நிரந்தர சீரமைப்பு பணி: நெடுஞ்சாலை இயக்குநர் ஆய்வு
சனி 30, நவம்பர் 2024 8:44:33 AM (IST)
கடந்த ஆண்டு பெய்த கனமழை, வெள்ளத்தில் சேதமடைந்த ஏரல் ஆற்று பாலத்தில் ரூ.6.95 கோடியில் நடைபெற்று வரும் நிரந்தர சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் எம்.சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கன மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் ஏரல் ஆற்றுபாலம் சேதம் அடைந்தது. இந்த பாலத்தில் கூடுதலாக இரண்டு கண்கள் அமைத்து சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை மூலம் வெள்ள நிரந்தர சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.6.95 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் எம்.சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை குறித்த காலத்தில் முடிக்க அதிகாரிகள், ஒப்பந்தாரர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், திருச்செந்தூர்- நெல்லை மாநில நெடுஞ்சாலையில் சென்னை- கன்னியாகுமரி தொழில்தட திட்டம் மூலம் ரூ.285 கோடியில் நடைபெற்று வரும் சாலை மற்றும் பாலப்பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது நெல்லை கண்காணிப்பு பொறியாளர் ஜெயராணி, தூத்துக்குடி கோட்ட பொறியாளர் ஆறுமுகநயினார், சென்னை- கன்னியாகுமரி தொழில்தட திட்ட கோட்ட பொறியாளர் ஜெயபிரகாஷ், நெல்லை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் திருவேங்கட ராமலிங்கம், உதவிக் கோட்ட பொறியாளர்கள் சின்னசாமி, கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஓட்டு போட்ட முட்டாள்Nov 30, 2024 - 10:37:41 PM | Posted IP 172.7*****