» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிராம நிர்வாக அலுவலகத்தில் கட்டப்பட்ட யானையால் பொதுமக்கள் அவதி!
வியாழன் 28, நவம்பர் 2024 5:19:02 PM (IST)
அருமனையில் கிராம நிர்வாக அலுவலகத்தின் உள்ளே யானையை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிராம நிர்வாக அலுவலகத்தின் உள்ளே கட்டப்பட்ட யானையால் அலுவலகத்திற்கு வந்த பொது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அலுவலக வளாகத்தில் உள்ளே யானையை நிறுத்தி அதற்கு பாகன் உணவு அளித்துள்ளார். அடிக்கடி இதுபோன்று யானையை பாகன் கொண்டு நிறுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.