» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆட்டோ டிரைவரை விபசாரத்திற்கு அழைத்த 3 பேர் கைது: 3 பெண்கள் மீட்பு
செவ்வாய் 5, நவம்பர் 2024 7:48:01 PM (IST)
நாகர்கோவில் அருகே ஆட்டோ டிரைவரை விபசாரத்திற்கு அழைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சுசீந்திரம் அருகே உள்ள அக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (49), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் மதியம் என்.ஜி.ஓ. காலனி சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் உள்பட 3 பேர் அங்கு வந்தனர்.
பின்னர் தங்களிடம் அழகிய பெண்கள் இருப்பதாகவும், அவர்களுடன் உல்லாசமாக இருக்க ரூ.2,500 கொடுத்தால் போதும் என அழைத்துள்ளனர். இதனை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து நாகராஜன் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
இதனை தொடர்ந்து என்.ஜி.ஓ. காலனி ராதாகிருஷ்ணன் நகரில் ராஜம் (62) என்பவர் குடியிருக்கும் வாடகை வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அங்கு அரைகுறை ஆடைகளுடன் இருந்த 3 பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் ஆந்திரா, சேலம் மற்றும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
விபசாரத்திற்கு புரோக்கராக ராஜம் இருந்துள்ளார். இவருக்கு சொந்த ஊர் கன்னியாகுமரி ஆகும். வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்த அவருக்கு உறுதுணையாக பெபின் மரியதாஸ் ராஜ் (34), பூவியூர் அருண் (25) ஆகியோர் செயல்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் 3 பேர் தான் ஆட்டோ டிரைவரை விபசாரத்திற்கு அழைத்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இதில் ராஜம் நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும், மற்ற 2 பேரும் நாகர்கோவில் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செப்.18ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:11:44 PM (IST)

பச்சிளம் குழந்தையின் வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்த கொடூர தாய் கைது!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 4:52:08 PM (IST)

30% ஊதிய உயர்வு வேண்டும்: 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 3:34:44 PM (IST)

ஸ்டெர்லைட் வழக்கில் கைதானவருக்கு நிபந்தனை ஜாமீன் : மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:37:02 AM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை சட்டப் பேரவை உறுதிமொழிக்குழு குழு ஆய்வு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 5:37:45 PM (IST)

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
புதன் 10, செப்டம்பர் 2025 4:15:51 PM (IST)
