» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூரு செல்லும் வண்டிகளில் இருக்கும் பிரச்சனைகள்.
சனி 7, செப்டம்பர் 2024 10:09:35 AM (IST)
தென்மாவட்டங்கள் காவிரி கழிமுக மாவட்டங்களில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் வண்டிகளில் இருக்கும் பிரச்சனைகள்.
பெங்களுர் நகரம் இந்தியாவின் சிலிகான் வேலி என்று அழைக்கப்படுகிறது. இங்கு அதிக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்து உள்ளது. இதைபோல் இங்கு மத்திய அரசுக்கு சொந்தமான பல்வேறு பொதுதுறை நிறுவனங்கள் அமைந்துள்ளன.
இந்த நகர் தமிழ்நாட்டிற்கு மிக அருகில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சென்னைக்கு அடுத்து அதிக அளவில் மக்கள் பெங்களுரில் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருக்கு மிக குறைந்த அளவே ரயில்கள் இயங்கி வருகின்றன. தற்போது இயங்கிவரும் வண்டிகளையும் அதன் பிரச்சனைகளும் பார்ப்போம்.
கழிமுக பகுதி மாவட்டங்கள் (டெல்டா மாவட்டங்கள்)
1. காரைக்கால் பெங்களூர் விரைவு வண்டி
பெங்களூரில் இருந்து காரைக்காலுக்கு இரண்டு மார்க்கங்களிலும் பகல் பொழுதில் இயக்குவதாலும் மற்றும் அதிகமான அனைத்து நிறுத்தங்களில் நின்று செல்வதாலும் பயண நேரம் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் பெரும்பாலும் இந்த வண்டியை மக்கள் பெங்களுர் செல்வதற்கு தவிர்த்து விடுவார்கள்.ஆனால் இடைப்பட்ட ரயில் நிலையங்களுக்கு இடையே குறுகிய தூரத்துக்கு அதிக அளவில் பயணம் செய்கின்றனர்.
2. கடலூர் துறைமுகம் - மைசூர் விரைவு வண்டி
தினசரி இயங்கும் ஒரே இரவு நேர வண்டி இது ஒன்று மட்டும் தான். அதிலும் பல பிரச்சினை உள்ளது. காரணம் பெங்களூரில் இருந்து புறப்படும் நேரம் சாதகமான நேரம் இல்லை என்பதால் இந்த சிக்கல். அலுவலக வேலை முடித்துவிட்டு அந்தி மாலை நேரத்தில் இந்த வண்டியை பிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும் (பெங்களூர் போக்குவரத்து நெரிசலை கவனத்தில் கொள்ள வேண்டும்). மேலும் ஈரோடு போய் சுற்றி செல்லும் வண்டிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் கடலூர் வரை நீட்டிப்பு செய்த காரணத்தால் திருச்சி பயணிகளுக்கு முன்பதிவு இருக்கைகள் கிடைப்பது சிரமமாக உள்ளது.
3. ஹம்சாபர் விரைவு வண்டி
முற்றிலும் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் கொண்ட இந்த வண்டிக்கு மும்பை பகுதியில் இருந்து திருச்சி வருபவர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் பெங்களூர் மக்கள் இதை விரும்பமாட்டார்கள். காரணம் மத்திய நேரத்திலும் அதிகாலை நேரத்தில் இயக்கப்படும் வண்டி என்பதால். இந்த வண்டியை இராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4. கோவா வேளாங்கண்ணி கோவா விரைவு வண்டி.
இந்த வண்டியில் இடம் கிடைத்துவிட்டால் அதிர்ஷ்டசாலி தான் என்பது தான் உண்மை. கோவாவில் வண்டி நிரப்பிவிடும் கூட்டம் வேளாங்கண்ணியில் தான் இறங்கும். அதாவது 1 - 1 ஆக பயணச்சீட்டு முன்பதிவு இருக்கும் தொடர்வண்டி களில் இதுவும் ஒன்று. ஆனாலும் இந்த வண்டியில் பெங்களூர் பயணம் செய்பவர்களும் உண்டு. இந்த வண்டி ஈரோடு, பங்காருபேட்டை என்று நெடுந்தூரம் சுற்றி செல்லும் வண்டிகளில் இதுவும் ஒன்று.
தென்மாவட்ட வண்டிகள்.
1. தூத்துக்குடி மைசூர் விரைவு வண்டி.
பெங்களூர் செல்லும் வண்டிகளில் ஏறே இந்த ஒரு வண்டிக்கு மட்டும் தான் இரு மார்க்கங்களிலும் சரியான நேரம் அமைந்துள்ளது. ஆனால் மைசூர் செல்லும் நேரம் சற்று சரியில்லாத நேரமாகவே அமைந்துள்ளது. ஈரோடு போய் சுற்றி செல்லும் வண்டிகளில் இதுவும் ஒன்று. இந்த தூத்துக்குடி – மைசூர் ரயில் மதுரையிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட ரயில் ஆகும். பின்னர் இரு மார்க்கங்களிலும் நீட்டிப்பு செய்யப்பட்டது. பெங்களூர் செல்லும் ஏறக்குறைய 75 சதவிகித தென்மாவட்ட பயணிகள் விருப்பமான வண்டி இந்த வண்டி தான்.
2. நாகர்கோவில் பெங்களூர் விரைவு வண்டி.
பெங்களூர் செல்வதற்கு தூத்துக்குடி வண்டிக்கு அடுத்தபடியாக இருக்கும் மற்றொரு இரவு நேர தினசரி வண்டி இது ஒன்றே. இந்த வண்டி ஒன்று மட்டும் தான் தினசரியாக நேர்வழியில் குறுகிய தூரத்தில் இயக்கப்படும் வண்டி. இந்த வண்டிக்கு இருக்கும் பெரும் பிரச்சனை இரு மார்க்கங்களிலும் சரியில்லாத நேரம் தான். பெங்களூரில் அந்தி மாலை நேரத்தில் புறப்பாடு மற்றும் காலை வருகை அலுவலக நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு. இப்படி இயக்கப்படுவதால் "கைக்கு எட்டிய பழம் வாய்க்கு எட்டாததைப்போல" பெங்களூர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை தான் பயணிகளுக்கு ஏற்றப்படுகிறது. அதுபோல அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலையும் ரூ அலுவலகத்தில் இருந்து கிளம்பி தொடர்வண்டியை பிடிக்க முடியாத சூழ்நிலையும் தான் நிலவுகிறது.
3. தாதர் திருநெல்வேலி சாளுக்கியா விரைவு வண்டி.
இந்த வண்டி தூத்துக்குடி மைசூரு வண்டிக்கு அடுத்தபடியாக பெங்களூர் செல்வதற்கு பெரும்பாலான பயணிகள் விரும்பப்படும் வண்டிகளில் ஒன்று. பெங்களூர் செல்வதற்கு நேர்வழியில் குறுகிய தூரத்தில் இயக்கப்படும் வண்டிகளில் ஒன்று. அதிகாலை நேரத்தில் பெங்களூர் சென்றடையும் படியும், பெங்களூரில் இருந்து மிகக் கச்சிதமான இரவுநேர வண்டியாகவும் செயல்படுகிறது.
இந்த வண்டிக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் இந்த வண்டி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படும். அப்படி இயக்கப்படும் நாட்கள் வார நாட்கள் இருக்கும். இது மட்டுமல்லாமல் மும்பை செல்லும் ரயில் ஆகையால் முன்பதிவு இருக்கைகள் குறைந்த அளவே பெங்களுர் பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெங்களுர் செல்ல குறைந்த அளவில் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும். பெங்களூருக்கு முன்பதிவு இருக்கை கிடைக்காமல் ஒரு சிலர் மும்பை வரை முன்பதிவு செய்து பெங்களுரில் இறங்கி செல்லும் பயணிகள் உண்டு
4. தூத்துக்குடி ஓகா விவேக் வாரந்திர விரைவு வண்டி.
மும்பையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்கு சிறந்த வண்டியாக இந்த வண்டி செயல்படுகிறது. ஆனால் பெங்களூரு மக்களிடையேயும் ஓரளவுக்கு பிரபலமான வண்டியாக தூத்துக்குடி பகுதியில் உள்ளது. காரணம் வார இறுதியில் இயக்கப்படும் வண்டி என்பதால் இந்த வண்டிக்கு மவுசு சற்று அதிகம். தூத்துக்குடி மைசூர் மற்றும் நாகர்கோவில் பெங்களூர் வண்டியில் இடம் கிடைக்காதவர்களுக்கு இந்த வண்டி தான் இறுதி நம்பிக்கை.
இந்த வண்டியில் ஈரோடு, பங்காருபேட்டை என நெடுந்தூரம் சுற்றி செல்லும் வண்டிகளில் ஒன்று. பெங்களூர் சென்றடையும் போது மதிய வேளை ஆகிவிடும். அதேபோல் பெங்களூரில் இருந்து வார இறுதி நாட்களில் திருச்செந்தூர் வரும் பக்தர்களுக்கு இந்த வண்டி தான் பிரபலமான வண்டியாக வரும் விளங்குகிறது. இது மட்டுமல்லாமல் குஜராத் செல்லும் ரயில் நெடுந்தூர பயணிகளுக்கு முன் பதிவில் முன்னுரிமை கொடுத்து பெங்களுர் செல்லும் பயணிகளுக்கு குறைந்த அளவே இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5. மதுரை பெங்களூர் வந்தே பாரத் விரைவு வண்டி.
இந்த வண்டி பகல் நேரத்தில் இயக்கப்படும் வண்டிகளில் ஒன்று. இந்த வண்டி திருச்சி, பங்காருபேட்டை என பாதை சற்று சுற்றி செல்லும் படியே அமைந்துள்ளது இதனால் மதுரை இருந்து பெங்களுர் செல்ல கட்டணம் அதிகமாக இருக்கிறது. காரணம் பெங்களூர் வழித்தடத்தில் பெரும்பாலும் பகல் வண்டியை பயணிகள் விரும்புவதில்லை என்று இயக்கத்தில் இருக்கும் வண்டிகளில் இருந்து பெறப்படும் தரவுகள் கூறுகிறது. இந்த வண்டிக்கு கட்டணம் சற்று அதிகமாக இருக்கின்ற காரணத்தால் நடுத்தர மற்றும் சாதாரண மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது.
6. ஹீயூப்பள்ளி இராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு வண்டி.
தென்மாவட்டங்களுக்கு மதுரை வழியாக அல்லாமல் திருச்சி வழியாக செல்லும் நேர்வழியில் குறுகிய தூரத்தில் சேரும் இடத்தை சென்றடையும் வண்டி இது. தென்மேற்கு ரயில்வேயில் வார இறுதி நாட்களில் பரிந்துரை செய்யப்பட்டு இதுவரை பெங்களூர் தொடர்பில்லாத பகுதிகள் வழியாக இயக்கப்பட்ட முதல் வண்டி இது. தற்போது சிறப்பு வண்டியாக இயங்கிக்கொண்டிருக்கும் இது விரைவில் நிரந்தரமான வண்டியாக இயங்க விருக்கிறது.
தற்போது சிறப்பு வண்டியாக இயக்கப்படுவதால் இந்த வண்டிக்கு நேரம் பிரச்சினை பெரும் சிக்கலாக உள்ளது. அலுவலக நேரத்திற்கு சென்று சேர வேண்டிய வண்டி சிறப்பு அந்தஸ்து காரணமாக பிற்பகலில் தான் பெங்களூருக்கு பெரும்பாலும் சென்று சேர்கிறது. மேலும் ஓசூர் வழியாக பல ஆண்டுகள் கழித்து தென்மாவட்டங்களுக்கு புதிதாக இயக்கப்பட இருக்கும் முதல் வண்டி என்ற பெருமையையும் பெற்ற வண்டி இது. இவ்வாறு சிக்கலான நேரத்தில் இயக்கப்படுவதால் இந்த வண்டியில் ஓரளவுக்கு எளிதாக இடம் கிடைத்துவிடும்.
7. மைசூரு செங்கோட்டை வாராந்திர சிறப்பு வண்டி.
பலவருட கோரிக்கைகளுக்கு பிறகு தென்காசி பகுதிக்கு முதன்முதலில் தொடர்வண்டி போக்குவரத்து இந்த வண்டியின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. முதன்முதலில் மைசூரு காரைக்குடி சிறப்பு வண்டியாக இயங்கியது பிறகு காரைக்குடியில் இருந்து செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டு தற்போது விழாக்கால சிறப்பு வண்டியாக இயக்கப்படுகிறது. நள்ளிரவில் மைசூரு மற்றும் பெங்களூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஒரே வண்டி என்ற பெருமை இந்த வண்டி பெறுகிறது.
இதன்மூலம் தொழில்நுட்பத் துறையில் இரண்டாவது ஷிப்ட் பணியாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் பெங்களூர் செல்லும் போது ராமேஸ்வரம் வண்டியை பின்தொடர்ந்தது செல்கிறது. ஏறக்குறைய ஓரே பாதைதான் என்றாலும் சேலத்திலிருந்து பங்காருபேட்டை வழியே ஒரு சுத்து சுற்றி செல்வது சாதகமாக அமைந்துள்ளது.
காரணம் இரட்டைப் பாதையாக உள்ளதால் தேவையின்றி எங்கும் நிற்காமல் இயக்கப்படும் சேலம் வரை. இவ்வாறு ராமேஸ்வரம் வண்டியை பின் தொடர்வதால் இந்த வண்டியில் ஏறக்குறைய பிற்பகலில் தான் பெங்களூருக்கு சென்றடைகிறது. ஆதலால் பெங்களூர் செல்பவர்கள் இந்த வண்டியை அவ்வளவாக விரும்புவது கிடையாது எனினும் பெங்களூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறந்த நேரத்தில் இயக்கப்படுகிறது.
8. நாகர்கோவில் மும்பை விரைவு வண்டி (4 நாட்கள்).
ஒரு காலத்தில் பெங்களூரில் உள்ள கிருஷ்ணராஜபுரம வழியாக மும்பை வரை சென்ற வண்டி இது. ஏறக்குறைய தூத்துக்குடி விவேக் வண்டியின் அதே பாதையில் திருநெல்வேலி சாளுக்கிய இயங்கும் அதே நாட்களில். ஆனால் கொரோனா முடிந்த பிறகு இந்த வண்டியின் பாதை சாமர்த்தியமாக மாற்றப்பட்டு தென்மேற்கு ரயில்வே பகுதிகள் அனைத்தும் தெற்கு மத்திய ரயில்வேக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆதலால் பாக்கலா வழியாக திருப்பி விடப்பட்டது. இது ஒரு கோரிக்கையாக தென்மாவட்ட மக்கள் வைக்கவில்லை என்றால் பெங்களூரு பகுதியில் உள்ளவர்கள் இதை பலமுறை கோரிக்கையாக வைத்துள்ளார்கள். ஏனெனில் பெங்களூர் மக்களுக்கு இந்த வண்டி மும்பைக்கு நேரடி இணைப்பை ஏற்படுத்துவது. ஆனால் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் தமிழக மக்களுக்கு மும்பை செல்ல சற்று இடம் அதிகமாக கிடைத்துள்ளது. இவ்வாறு வழித்தடம் மாற்றம் செய்து விடப்பட்டதற்கு மாற்று ஏற்பாடாக வேறு ரயில்கள் புதிதாக இயக்கப்படவில்லை
9. மைசூரு மானாமதுரை ராமேஸ்வரம் சிறப்பு வண்டி.
தென்மேற்கு ரயில்வேயில் பரிந்துரை செய்யப்பட்ட வண்டி இது. சிறப்பு வண்டியாக சில நாட்கள் ஓடியது பிறகு ஏதோ காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் வந்தால் மதுரை வழியாக இயங்கும்.