» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கடத்தல் கும்பலுக்கு துணை போனதாக புகார்: இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
சனி 10, ஆகஸ்ட் 2024 11:20:28 AM (IST)
கடத்தல் கும்பலுக்கு துணை போனதாக புகார் எழுந்ததால் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
குமரி மாட்டத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, மண்எண்ணெய் மற்றும் மீனவர்களின் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெய் உள்ளிட்டவற்றை சிலர் மலிவான விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.
இதனை கொல்லங்கோடு உள்பட எல்லை பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இந்தநிலையில் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் தாமஸ், கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பல்வேறு புகார் வந்தது. இதுதொடர்பாக ரகசியமாக கண்காணிக்க எஸ்பி சுந்தரவதனம், சில போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கொல்லங்கோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருமன்னம் பகுதியில் கேரளாவுக்கு கடத்துவதற்காக 350 லிட்டர் மண்எண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் தாமஸ் அந்த மண்எண்ணெய்யை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதற்கிடையே வேறொரு கும்பல் அந்த மண்எண்ணெய்யை திருடி சென்று விற்பனை செய்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டரை கண்காணித்து வந்த ரகசிய போலீசார் இந்தசம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளின் ஆதாரத்துடன் எஸ்பிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாமசை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி சுந்தரவதனம் உத்தரவிட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதபடைக்கு மாற்றப்பட்ட விவகாரம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செப்.18ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:11:44 PM (IST)

பச்சிளம் குழந்தையின் வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்த கொடூர தாய் கைது!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 4:52:08 PM (IST)

30% ஊதிய உயர்வு வேண்டும்: 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 3:34:44 PM (IST)

ஸ்டெர்லைட் வழக்கில் கைதானவருக்கு நிபந்தனை ஜாமீன் : மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:37:02 AM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை சட்டப் பேரவை உறுதிமொழிக்குழு குழு ஆய்வு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 5:37:45 PM (IST)

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
புதன் 10, செப்டம்பர் 2025 4:15:51 PM (IST)
