» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு: ஆளுநர், அமைச்சர் வரவேற்பு
சனி 18, மார்ச் 2023 10:22:23 AM (IST)

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் இன்று காலை கன்னியாகுமரி வந்தார். அவரை ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
அரசு விருந்தினா் மாளிகையில் சிறிது நேர ஓய்வுக்குப் பின், படகுத் துறைக்கு செல்லும் திரௌபதி முா்மு, தனிப்படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளூர் சிலையை பார்வையிடுகிறார். பின்னர், விவேகானந்த கேந்திரத்துக்கு செல்கிறாா். அங்குள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சிக் கூடம் மற்றும் பாரத மாதா கோவிலுக்குச் சென்று பாா்வையிடுகிறாா். பின்னா் காலை 11.30 மணிக்கு, கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறாா்.
குடியரசுத் தலைவா் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரி நகரப் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹெலிகாப்டா் தளம், அரசு விருந்தினா் மாளிகை, பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத் துறை, விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை, முக்கடல் சங்கமம், சூரிய அஸ்தமனப் பூங்கா, விவேகானந்த கேந்திர ராமாயண கண்காட்சிக் கூடம், பாரத மாதா கோயில் ஆகிய இடங்களில் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனைக்குப் பின்னா் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.
மேலும், கொட்டாரம் தொடங்கி முக்கிய சந்திப்புகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவா் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி, விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு சனிக்கிழமை பகல் 11.30 மணி வரை படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)
