» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரான் உடனான 2ஆம் கட்ட அமைதிப்பேச்சுவார்த்தை : அமெரிக்க துணை அதிபர் பங்கேற்கவில்லை
சனி 25, ஏப்ரல் 2026 12:03:38 PM (IST)
ஈரான் உடனான 2ஆம் கட்ட அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பங்கேற்க மாட்டார் என வெள்ளை மாளிகை செயலர் கரோலின் லீயாவிட் கூறியுள்ளார்.
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அமெரிக்க பிரதிநிதிக் குழுவினர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தலைமையில் நடைபெறும் 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 24) இரவு அந்நாட்டு தலைநகர் இஸ்லாமாபாதுக்குச் சென்றுள்ளார்.இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிகாரி ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகனும் அவர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரியுமான ஜராட் குஷ்னர் ஆகியோர் இன்று பாகிஸ்தான் சென்று ஈரானிய அதிகாரிகளுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பாகிஸ்தானில் நடைபெற்று தோல்வியடைந்த முதற்கட்ட அமைதிப் பேச்சுக்குத் தலைமைத் தாங்கிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை செயலர் கரோலின் லீயாவிட் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்த நிகழ்வில் அமெரிக்க அதிகாரிகளுடன் நேரடியாக ஈரானிய அமைச்சர் அராக்சி பேச்சுவார்த்தை மேற்கொள்ளமாட்டார் எனவும், போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கான நிபந்தனைகளை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தெரிவிப்பார் எனவும் ஈரானின் அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் மேற்கொண்ட தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்திருந்த முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.
இத்துடன், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால், பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு உருவானது. இதையடுத்து, கடந்த ஏப். 7 அன்று இருதரப்புக்கும் இடையே 3 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக, அதிபர் டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு : 51 பேர் உயிரிழப்பு; 10 லட்சம் மக்கள் பாதிப்பு!
திங்கள் 13, ஜூலை 2026 5:04:09 PM (IST)

வியத்நாமில் படகு கவிழ்ந்து கோர விபத்து: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி!
சனி 11, ஜூலை 2026 5:50:04 PM (IST)

இந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 11, ஜூலை 2026 12:21:14 PM (IST)

நியூசிலாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி: 40 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றுப் பயணம்!
வெள்ளி 10, ஜூலை 2026 4:54:38 PM (IST)

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட 3 பழங்கால சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா!
வியாழன் 9, ஜூலை 2026 4:44:33 PM (IST)

வளைகுடாவில் உச்சக்கட்ட போர் பதற்றம்: வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் - இந்தியா கவலை!
வியாழன் 9, ஜூலை 2026 10:33:33 AM (IST)


