» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த முடியாது: நேட்டோ மாநாட்டில் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
புதன் 8, ஜூலை 2026 3:59:06 PM (IST)

ஈரானுடனான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இனி ஈரானுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டின் இடையே, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் இணைந்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ட்ரம்ப், "ஈரானுடனான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவுற்றுள்ளது.
ஈரான் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் சில நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டு, பின்னர் பொதுவெளியில் அவற்றை மறுக்கிறார்கள். இனி நேர்மையான முறையில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என நம்பவில்லை. ஈரானுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்கத் தரப்பு தொடர்வது நேரத்தை வீணடிக்கும் செயல். அவர்கள் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த 3 வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது. இதற்குப் பதிலடியாக, ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் தளங்கள், புரட்சிகர காவலர் கப்பல்கள் உள்பட 80-க்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகளை அமெரிக்கப் படைகள் வான்வழியாகத் தாக்கி அழித்தன. மேலும், ஈரான் எண்ணெய் விற்பனை செய்வதற்கான சர்வதேச அனுமதியையும் அமெரிக்கா அதிரடியாக ரத்து செய்தது.
அமெரிக்கப் படைகளின் இந்த அதிரடித் தாக்குதலுக்குப் பதிலடியாகப் பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தொடங்கியுள்ள இந்த நேரடி ராணுவ மோதல் மேலும் விரிவடைந்து, உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர வழிவகுக்குமோ என்ற அச்சம் சர்வதேச சந்தையில் எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி கமேனி இறுதிச் சடங்கில் பங்கேற்பு: இந்தியாவுக்கு ஈரான் நன்றி!
புதன் 8, ஜூலை 2026 12:43:48 PM (IST)

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு சர்வதேச வளாகம்: ஜகார்த்தாவில் பிரதமர் மோடி அறிவிப்பு!
புதன் 8, ஜூலை 2026 10:23:55 AM (IST)

பிரிவினைவாதிகளின் குற்றச்செயல்களுக்கு இடம் இல்லை: இந்தியாவிடம் நியூசிலாந்து பிரதமர் உறுதி!
செவ்வாய் 7, ஜூலை 2026 12:26:02 PM (IST)

இலங்கையில் 2-வது நாளாக நீடித்த சிறை மோதல்: 25 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!
செவ்வாய் 7, ஜூலை 2026 8:54:53 AM (IST)

நியூயார்க் புரூக்ளின் பாலத்தில் பயங்கர தீ விபத்து: சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பரபரப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 12:40:38 PM (IST)

உக்ரைனின் முக்கிய நகரைக் கைப்பற்றியது ரஷ்யா: புதின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சனி 4, ஜூலை 2026 3:35:07 PM (IST)


