» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் பகுதி: டிரம்ப் அறிவிப்பால் நீடிக்கும் பதற்றம்!!

சனி 22, ஆகஸ்ட் 2026 11:46:27 AM (IST)

StraightofHarmTrumpa.jpg

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே நான் பார்க்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கரோலினாவின் மிர்டில் பீச்சில் நடைபெற்ற அரசியல் பிரச்சாரப் பேரணியில் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டு உரையாற்றினார்.ஈரான் விவகாரம் குறித்து அவர் பேசியதாவது: ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது. அவர்கள் அணு ஆயுதம்பெற்றால் அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். இனி அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கப் போவதில்லை.

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஈரான் தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த ஒப்பந்தம் நமக்குத் தேவையா என்பதே சந்தேகம்தான். ஏனெனில், ஹோர்முஸ் நீரிணையை நான் அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே கருதுகிறேன்; அது ஒரு அமெரிக்கப் பிரதேசம்.

ஈரான் எல்லைகளையும் ஹோர்முஸ் நீரிணைப் பாதையையும் நாங்கள் எங்கள் முழுப் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். உலகளவில் கச்சா எண்ணெய் கடல்வழிப் போக்குவரத்தில் மிக முக்கியப் பாதையாக ஹோர்முஸ் நீரிணை திகழ்கிறது. முன்னதாக, இப்பகுதியில் ஏற்பட்ட போர்ப் பதற்றம் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுவதுமாக மூடியது. 

தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுத் தற்போது அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும், பாதையை மீண்டும் திறப்பதில் அமெரிக்கா - ஈரான் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஈரான் இது தொடர்பாக ஓமனுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாட்டின் வரைபடத்தில் ஹோர்முஸ் நீரிணையை வட்டமிட்டு, இது அமெரிக்காவின் பகுதி எனத் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory