» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவுடனான வர்த்தக உறவால் பிரிட்டனுக்குப் பெரும் லாபம் : பிரதமர் கியர் ஸ்டார்மர்

சனி 31, ஜனவரி 2026 11:59:49 AM (IST)


சீனாவுடனான வர்த்தக உறவால் பிரிட்டனுக்குப் பெரும் பொருளாதார லாபம் ஈட்டப்படவிருப்பதாக அந்நாட்டின் பிரதமர் கியர் ஸ்டார்மர் தெரிவித்தார்.

பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் இருநாட்டு உறவில் மேம்பாடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, பிரிட்டனுடன் கல்வி மற்றும் நிதி விவகாரங்களில் ஒத்துழைப்பளிக்க சீன அதிபர் விருப்பம் தெரிவித்தார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு, உயிரிஅறிவியல்,புத்தாக்க ஆற்றல், குறைந்த கார்பன் தொழில்நுட்பம் உள்பட பல துறைகளில் இருநாடுகளும் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடவும் அவர் பிரிட்டனை வலியுறுத்தினார்.

இதனிடையே, தமது சீனப் பயணம் குறித்து ஸ்டார்மர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "சீனாவுக்குச் செல்லும் எமது பயணத்தால் பிரிட்டன் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றிருந்தேன். அதேபோலவே, இப்போது இந்தப் பயணத்தால் கோடிக்கணக்கான பௌண்ட்ஸ் மதிப்பிலான ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை கொண்டு வந்துள்ளோம். அதிலும் குறிப்பாக, நமது விஸ்கி தொழில், அதில், வரியைப் பாதியாகக் குறைத்துள்ளது சீனா. இதுவே பிரிட்டனுக்கு நன்மை வரப்போவதைக் குறிக்கும் சிறந்த ஆதாரம்” என்றிருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory