» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு!

சனி 31, ஜனவரி 2026 10:56:34 AM (IST)


தமிழக கோ​யில்​களில் இருந்து கடத்​தப்​பட்ட நடராஜர் வெண்கல சிலை உட்பட 3 சிலைகளை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்க அமெரிக்க அருங்​காட்​சி​யகம் ஒப்​புக் கொண்​டுள்​ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் ‘ஸ்​மித்​சோனியன் தேசிய அருங்​காட்​சி​யகம்’ வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வின் தமிழகக் கோயில்​களில் இருந்து சட்​ட​விரோத​மாகக் கடத்​தப்​பட்ட 3 வெண்கல சிலைகளை திருப்பி ஒப்​படைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

கடந்த 10-ம் நூற்​றாண்டை சேர்ந்த ஷிவா நடராஜர் சிலை, 12-ம் நூற்​றாண்டை சேர்ந்த சோமாஸ்​கந்​தர் மற்​றும் 16-ம் நூற்​றாண்டு விஜயநகர காலத்​தைச் சேர்ந்த சுந்​தரர்​-பரவை நாச்​சி​யார் வெண்கல சிலைகள் இந்​தி​யா​விடம் ஒப்​படைக்க முடிவு செய்​யப்​பட்​டது.

இந்த சிலைகள் குறித்து அருங்​காட்​சி​யகம் தீவிர ஆராய்ச்சி செய்​தது. பல்​வேறு ஆவணங்​களை​யும் ஆய்வு செய்​தது. அப்​போது இந்​தச் சிலைகள் தமிழகக் கோயில்​களில் இருந்து பல ஆண்​டு​களுக்கு முன்​னர் திருடப்​பட்டு கடத்​தப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. எனவே, 3 சிலைகளை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

எனினும், இரு நாட்​டின் நட்​புறவு அடிப்​படை​யில், ஷிவா நடராஜர் சிலையை மட்​டும் அருங்​காட்​சி​யகத்​தில் நீண்ட கால அடிப்​படை​யில் தொடர்ந்து காட்​சிப்​படுத்த இந்​தியா அனு​மதி அளித்​துள்​ளது. அந்த சிலையை பற்​றிய முழு விவரங்​களும் அருங்​காட்​சி​யகத்​தில் காட்​சிப்​படுத்​தப்​படும்.

தென் இந்​தி​யா​வின் வெண்கல வார்ப்பு திறன், கலை நுணுக்​கம், புனிதம் போன்​றவற்​றின் எடுத்​துக்காட்​டாக இந்த சிலைகள் அமைந்​துள்​ளன. வழக்​க​மாக இந்த சிலைகள் கோயில் விழா​வின் போது ஊர்​வல​மாக எடுத்​துச் செல்​லப்​படும். இவ்​வாறு அருங்​காட்​சி​யகம் தெரி​வித்​துள்​ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory