» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஐ.நா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த இந்தியா : நன்றி சொன்ன ஈரான்
திங்கள் 26, ஜனவரி 2026 12:26:54 PM (IST)
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்ததற்காக இந்தியாவுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் டிசம்பர் 28 முதல் ஈரான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டங்களை ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. போராட்டக்காரர்கள் போலீஸ் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இந்நிலையில் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் வந்தது. இந்தத் தீர்மானத்தின் மூலம் ஈரானில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தும்.
மொத்தம் 47 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில், 25 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை தீர்மானத்தை எதிர்த்து இந்தியா, சீனா உள்ளிட்ட ஏழு நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி,"இந்திய அரசின் உறுதியான மற்றும் கொள்கை ரீதியான ஆதரவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மஜீத் ஹக்கீம் இல்லாஹி, இந்தியா- ஈரானின் உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவில் மனைவி, 3 உறவினர்கள் சுட்டுக் கொலை: இந்திய வம்சாவளி நபர் கைது
ஞாயிறு 25, ஜனவரி 2026 8:58:50 PM (IST)

இந்தியா மீதான வரி விதிப்பு 25சதவீதமாக குறைக்கப்படும்: அமெரிக்க அதிகாரி தகவல்
சனி 24, ஜனவரி 2026 3:51:43 PM (IST)

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
சனி 24, ஜனவரி 2026 12:08:44 PM (IST)

அமெரிக்காவில் 5 வயது சிறுவன் கைது எல்லை மீறிய செயல் : கமலா ஹாரிஸ் கண்டனம்
வெள்ளி 23, ஜனவரி 2026 5:42:26 PM (IST)

உக்ரைனின் மறுகட்டமைப்புக்கு அமெரிக்காவில் முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளை தர தயார்: புதின்
வியாழன் 22, ஜனவரி 2026 11:34:49 AM (IST)

ஜப்பான் முன்னாள் பிரதமரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 21, ஜனவரி 2026 4:05:36 PM (IST)

