» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க மாட்டோம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்

புதன் 1, அக்டோபர் 2025 11:49:23 AM (IST)



பாலஸ்தீனத்தை ஒருபோதும் தனிநாடாக அங்கீகரிக்க மாட்டேன்’ என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசமாக கூறினார்

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு பின்னர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடியாக நாடு திரும்பினார். டெல் அவிவ் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, பாலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த நெதன்யாகு, ‘பாலஸ்தீனத்தை தனியாக ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டேன்’ என ஆவேசமாக கூறினார். அவர் மேலும் கூறுகையில், போர் நிறுத்தத்திற்கான டிரம்ப்பின் அமைதி உடன்படிக்கை மற்றும் 20 அம்ச திட்டத்திற்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் வேண்டும் என்பதே நமது நிலைப்பாடே தவிர ஒருபோதும் அதற்கு தனிநாடு அங்கீகாரம் அளிக்க மாட்டோம்” என்றார்.

இந்தநிலையில் டிரம்ப் முன்வைத்த காசா அமைதித் திட்டத்தை ஹமாஸ் மறுபரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் தரப்பு கூறுகையில், "டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. தலைமை உறுப்பினர்கள் மற்றும் தகவல்தொடர்பு சிக்கல்கள் காரணமாக இந்த பேச்சுவார்த்தை முடிவதற்கு சில நாட்கள் எடுக்கும். அதன்பின்னர்தான் இதற்கு முழுமையான தீர்வு காணப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory