» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஜகார்த்தாவில் தனியார் அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து : கர்ப்பிணி உள்பட 20 பேர் சாவு
புதன் 10, டிசம்பர் 2025 8:45:58 AM (IST)

ஜகார்த்தாவில் உள்ள தனியார் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கர்ப்பிணி உள்பட 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் தனியார் அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. 7 மாடி கொண்ட இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் மளமளவென அந்த கட்டிடத்தின் மற்ற தளங்களுக்கும் தீ வேகமாக பரவியது. கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது.
இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அவர்கள் அங்கு சென்றதும் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே அந்த கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. அப்போது கர்ப்பிணி உள்பட 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், டிரோன் விற்பனை நிலையத்தின் சேமிப்பு கிடங்கில் இருந்த பேட்டரி திடீரென வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதின் வருகை எதிரொலி : இந்திய அரிசிக்கு வரியை இரட்டிப்பாக டிரம்ப் பரிசீலனை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:27:29 AM (IST)

எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம்: ஐரோப்பிய ஆணையம் நடவடிக்கை
சனி 6, டிசம்பர் 2025 4:43:51 PM (IST)

இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் : பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:39:34 PM (IST)

கொலை வழக்கில் இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு
வியாழன் 4, டிசம்பர் 2025 12:48:43 PM (IST)

ஆப்கானிஸ்தானில் கொடூர குற்றவாளிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சிறுவன்..!
புதன் 3, டிசம்பர் 2025 5:15:22 PM (IST)

பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்: ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!
புதன் 3, டிசம்பர் 2025 12:28:09 PM (IST)


.gif)