» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவில் ரூ.336 கோடி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை!
திங்கள் 29, செப்டம்பர் 2025 12:09:28 PM (IST)

சீனாவில் ரூ.336 கோடி ஊழல் வழக்கில் முன்னாள் வேளாண் துறை அமைச்சருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சீனாவின் முன்னாள் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார அமைச்சர் டாங் ரெஞ்சியன் (63). இவர் தனது பதவிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அரசின் திட்டங்களை பணத்தை வாங்கிக் கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு ஜிலின் மாகாணம் சாங்சுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் நலத்திட்டங்களை ஒதுக்குவதற்காக பயனாளிகளிடம் இருந்து சுமார் ரூ.336 கோடி வரை லஞ்சம் பெற்றது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் வழக்கில் டாங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்த தொகையை அவரிடம் இருந்து கைப்பற்றி தேசிய கருவூலத்துக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு
வியாழன் 2, அக்டோபர் 2025 4:56:02 PM (IST)

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க மாட்டோம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்
புதன் 1, அக்டோபர் 2025 11:49:23 AM (IST)

இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த டிரம்பின் 21 அம்ச அமைதித் திட்டம்: முஸ்லிம் நாடுகள் ஆதரவு!
செவ்வாய் 30, செப்டம்பர் 2025 5:01:26 PM (IST)

ஆஸி. நாடாளுமன்றத்தில் இசையமைப்பாளர் தேவா : செங்கோல் வழங்கி கவுரவிப்பு!
சனி 27, செப்டம்பர் 2025 12:17:09 PM (IST)

நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16ஆக குறைப்பு: இடைக்கால பிரதமர் அறிவிப்பு
வெள்ளி 26, செப்டம்பர் 2025 5:30:52 PM (IST)

ரஷியா போரை நிறுத்த வல்லரசுகள் உதவாவிடில் ஆயுத போட்டி ஏற்படும் : ஸெலென்ஸ்கி
வெள்ளி 26, செப்டம்பர் 2025 12:56:47 PM (IST)
