» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா - பாகிஸ்தான் போர் உட்பட இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளேன்: டிரம்ப் பெருமிதம்!
செவ்வாய் 29, ஜூலை 2025 5:07:25 PM (IST)
இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளதாகவும் சமாதானத்தின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம், ஆயிரக்கணக்கான உயிர்களை நாங்கள் காப்பாற்றியுள்ளோம். இரு நாடுகளுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு எனது வர்த்தகக் குழுவிற்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். 6 மாதங்களில் நான் பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறேன். சமாதானத்தின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது டிரம்ப் கூறுகையில், "நாங்கள் 6 போர்களை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறோம். அதைதான் நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள். ஒருவரையொருவர் கொல்லும் நாடுகளுடன் நாங்கள் வர்த்தகம் செய்ய விரும்பவில்லை. எனவே, வர்த்தகம் மூலமாக போரை நிறுத்தியுள்ளோம்.
நான் இல்லாதிருந்தால் இப்போது 6 பெரிய போர்கள் நடந்து கொண்டிருக்கும். இந்தியா பாகிஸ்தானுடன் சண்டையிட்டிருக்கும். இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணுசக்தி நாடுகளின் போரை நிறுத்தியது பெரிய விஷயம்" என்று பேசியுள்ளார்.
தாய்லாந்து - கம்போடியா எல்லை தொடர்பான பிரச்சனையில் இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டது. போரின் தொடக்கத்திற்கு இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வந்த நிலையில், போரின் 5 ஆவது நாளான நேற்று(ஜூலை 28) இரு நாட்டுத் தலைவர்களுடன் மலேசிய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கம்போடியா பிரதமர் ஹுன் மானெட், தாய்லாந்து தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயாசாய் ஆகியோருடன் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் நடத்திய இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் சீனா, அமெரிக்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், எந்த நிபந்தனையுமின்றி போரை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. அதன்படி இன்று(ஜூலை 29) முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக, அமெரிக்காவுடனான வர்த்தகம் பாதிக்கும் என எச்சரித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் கூறியிருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு
வியாழன் 2, அக்டோபர் 2025 4:56:02 PM (IST)

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க மாட்டோம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்
புதன் 1, அக்டோபர் 2025 11:49:23 AM (IST)

இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த டிரம்பின் 21 அம்ச அமைதித் திட்டம்: முஸ்லிம் நாடுகள் ஆதரவு!
செவ்வாய் 30, செப்டம்பர் 2025 5:01:26 PM (IST)

சீனாவில் ரூ.336 கோடி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை!
திங்கள் 29, செப்டம்பர் 2025 12:09:28 PM (IST)

ஆஸி. நாடாளுமன்றத்தில் இசையமைப்பாளர் தேவா : செங்கோல் வழங்கி கவுரவிப்பு!
சனி 27, செப்டம்பர் 2025 12:17:09 PM (IST)

நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16ஆக குறைப்பு: இடைக்கால பிரதமர் அறிவிப்பு
வெள்ளி 26, செப்டம்பர் 2025 5:30:52 PM (IST)
