» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரம்மபுத்திரா அணை திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை: சீன அரசு விளக்கம்

வியாழன் 24, ஜூலை 2025 12:12:05 PM (IST)



பிரம்மபுத்திரா நதியில் அணை கட்டுமான திட்டத்தால் ஏற்படும் நன்மை நிச்சயம் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று சீனா கூறியுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய அணையை பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ரூ.14 லட்சம் கோடி மதிப்பில் கட்டத்தொடங்கியுள்ளது சீனா. யார்லங் ஸாங்போ என்ற பெயரில்( பிரம்மபுத்திரா) திபெத் பிராந்தியத்தில் ஓடும் இந்த நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கான தொடக்க விழா கடந்த ஜூலை 19ஆம் தேதி சீனப் பிரதமர் லீ கியாங் தலைமையில் நடந்தது.

பிரம்மபுத்திரா நதி சீனாவில் பிறந்தாலும், இந்தியா வழியாக கடந்து வங்கதேசத்திற்கு சென்று கடலில் கடக்கிறது. சீனா அணை கட்டி அதை தடுக்கும் பட்சத்தில் இந்தியா மற்றும் வங்கதேச பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். இந்த புதிய அணைக்கு மொடுடோ நீர்மின் நிலையம் என பெயர் கூட சீனா சூட்டிவிட்டது. இந்த மெகா அணை கட்டப்பட்டுவிட்டால், உலகின் மிகப் பெரிய அணை புதிய சாதனை நிகழ்த்தப்படும். 

அதே நேரத்தில் பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், இந்தியாவும், வங்கதேசமும் அணை கட்டுவதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த அணை விவகாரம் கு றித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியதாவது: அணை கட்டப்படுவதால், பிரம்மபுத்திரா நதி பாய்ந்தோடும் நாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக பிரம்மபுத்திரா நதியில் ஏற்படும் அளவுக்கு அதிகமான வெள்ளப்பெருக்கு தடுக்கப்படும். இதனால், இயற்கை பேரிடர் நிகழ்வது குறையும். 

அணை கட்டும் திட்டம் தொடர்பாக இந்தியா மற்றும் வங்கதேசத்திடம் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பிரம்மபுத்திரா பாய்ந்தோடும் நாடுகளின் நலனிலும் சீனா அக்கறை கொண்டுள்ளது. அணை கட்டுமான திட்டத்தால் ஏற்படும் நன்மை நிச்சயம் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கும் பகிர்ந்தளிக்கப்படும். அணை கட்டுவது என்பது சீனாவின் இறையாண்மைக்கு உட்பட்டது" என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory