» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக உள்ளது: சீனா கண்டனம்
திங்கள் 3, பிப்ரவரி 2025 5:43:49 PM (IST)
அமெரிக்காவின் வரி விதிப்பு சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக உள்ளது என சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதை பொருட்களின் பெரும் அச்சுறுத்தல்களை தடுக்கும் விதமாக கனடா மற்றும் மெக்சிகோ நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரியும் விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடியாக கனடாவும் 25 சதவிகித வரியை அமெரிக்க பொருட்களுக்கு விதித்துள்ளது. அதேபோல மெக்சிகோவும் பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
இந்த நிலையில், சீனா இவ்விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், " அமெரிக்காவின் வரி விதிப்பு சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக உள்ளது. அமெரிக்கவின் இந்த செயல் இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது
திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)


.gif)