» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை தாமதப்படுத்திய ஹமாஸ்; இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி!

ஞாயிறு 19, ஜனவரி 2025 8:43:13 PM (IST)



போர் நிறுத்த ஒப்பந்தத்தை சுமார் 3 மணிநேரம் ஹமாஸ் தாமதப்படுத்தியதால் ஆத்திரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல், ஹமாஸ் இடையே இன்று மதியம் 12 மணிக்கு (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30 மணி) தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வரவிருந்தது. இதற்கான ஒப்பந்தம் உறுதியாகியிருந்தது. ஒப்பந்தப்படி ஹமாஸ் தங்கள் வசமுள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை இன்று விடுதலை செய்ய வேண்டும். இதற்கு ஈடாக 90 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும். 

ஒப்பந்தப்படி, இரு தரப்பும் விடுதலை செய்ய உள்ள கைதிகளின் பெயர் விவரங்களை 24 மணிநேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். அதன்படி, விடுதலை செய்யப்பட உள்ள பாலஸ்தீனிய கைதிகள் 90 பேரின் பெயர் விவரத்தை இஸ்ரேல் நேற்றே வெளியிட்டுவிட்டது. ஆனால், விடுதலை செய்யப்பட உள்ள இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரின் பெயர் விவரத்தை ஹமாஸ் ஆயுதக்குழு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. 

போர் நிறுத்த ஒப்பந்தப்படி விடுதலை செய்யப்பட உள்ள பணய கைதிகளின் பெயர் விவரங்களை ஹமாஸ் மதியம் 12 மணிக்குள் (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30 மணி) வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், பெயர் விவரத்தை வெளியிடாமல் ஹமாஸ் ஆயுதக்குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தை தாமதப்படுத்தியது. இதனால், ஆத்திரமடைந்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. 

காசா முனையின் ரபா, கான் யூனிஸ், காசா சிட்டி, வடக்கு காசா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30) அமலாக இருந்த இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் சுமார் 3 மணிநேர தாமதத்திற்குப்பின் மதியம் 2.45 மணியளவில் (இஸ்ரேல் நேரப்படி 11.15 மணி) அளவில் அமலுக்கு வந்துள்ளது.


மக்கள் கருத்து

உண்மையான தேச பக்தன்Jan 20, 2025 - 09:21:07 AM | Posted IP 162.1*****

இஸ்ரயேலை கைப்பற்ற வந்த ஹமாஸ் தீவிரவாதிகள், உண்மையான கடவுள் தேசம் இஸ்ரேல் என்ற குட்டி நாட்டை சமாளிக்க முடியாமல் அல்லாவின் பெயரை பயன்படுத்தி அப்பாவி மக்களை கடத்திக் கொன்று அப்பாவி குழந்தைகள், அப்பாவி அடுத்த வீட்டு வாலிப பெண்களையும் காம இச்சைக்காக கடத்தி சென்று வீரத்தை காட்டும் முகத்தை மறைக்கும் பொட்டை ஹிஜாப் மாடல் ஹமாஸ் தீவிரவாதிகள், அந்த ஹமாஸ் தீவிரவாதிகளை கொத்து கொத்தாக வெட்டி நாய்க்கு போட வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory