» செய்திகள் - விளையாட்டு » உலகம்
புதின் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடை: டிரம்ப் எச்சரிக்கை!
புதன் 22, ஜனவரி 2025 12:28:18 PM (IST)
விளாதிமீர் புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷிய மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக நேற்று பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில், உக்ரைன் போர் குறித்து இன்று செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், ரஷிய அதிபர் புதினை எந்த நேரத்திலும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும், அவர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.மேலும், ரஷியா - உக்ரைன் போர் குறித்து டிரம்ப் பேசியதாவது: போர் ஒருபோதும் தொடங்கி இருக்கக் கூடாது. திறமையான அதிபர் இருந்திருதால் போர் நடந்திருக்காது. நான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைனில் ஒருபோதும் போர் நடந்திருக்காது. நான் அதிபராக இருந்திருந்தால் ரஷியா போருக்கு சென்றிருக்காது. புதினுடன் எனக்கு மிக வலுவான புரிதல் இருந்தது. மக்களை அவமதித்த பைடனை புதின் அவமதித்தார்.
பைடனை எந்த நேரத்திலும் சந்திக்கத் தயார். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள், இது ஒரு கொடூரமான சூழல். பெரும்பாலானோர் ராணுவ வீரர்களாக மாறிவிட்டார்கள். நகரங்கள் இடிந்த இடங்களாக காணப்படுகிறது. உக்ரைனில் அறிவிக்கப்பட்டதைவிட அதிகளவிலான மக்கள் பலியாகியுள்ளனர். உண்மையான எண்ணிக்கையை வெளியிடாததற்கு உங்களை குறை சொல்லவில்லை, வெளியிட விரும்பாத அரசை குறை கூறுகிறேன்.
உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதம் அளிக்கப்படுமா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. புதினுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். அமைதியை விரும்புவதாக உக்ரைன் அதிபர் என்னிடம் கூறினார். இரு தரப்பினரையும் எந்த நேரத்திலும் சந்திப்பேன். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதை தடுக்க விரைவில் முடிவு காண விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் தாக்குதலில் குவைத் நீர் சுத்திகரிப்பு நிலையம் சேதம்: இந்தியத் தொழிலாளி உயிரிழப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:34:14 PM (IST)

அமெரிக்கா - ஈரான் போர்: மத்தியஸ்தம் செய்ய முன்வந்த பாகிஸ்தானுக்கு ஈரான் மறுப்பு..!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:32:25 PM (IST)

அமெரிக்காவை அதிரவைத்த வடகொரியா: 15,000 கி.மீ தொலைவு பாயும் ஏவுகணை சோதனை வெற்றி!
திங்கள் 30, மார்ச் 2026 9:26:02 AM (IST)

நேபாளத்தில் முன்னாள் பிரதமர் கைது: புதிய அரசு பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:48:06 AM (IST)

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி!
வெள்ளி 27, மார்ச் 2026 11:04:09 AM (IST)

ஹோர்முஸ் முடக்கத்திற்கு காரணமான ஈரான் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்!
வியாழன் 26, மார்ச் 2026 5:00:28 PM (IST)

