» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நேபாளம் – திபெத் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
செவ்வாய் 7, ஜனவரி 2025 12:13:55 PM (IST)
நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. லாபுசே நகரில் இருந்து 93 கிலோ மீட்டர் தொலைவில் காலை 6.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி., கேமராக்களில் கட்டிடங்கள், வீடுகள், சாலையோர மின்கம்பங்கள் குலுங்கும் வீடியோ காட்சிகள் பதிவாகி இணையத்தில் வெளியாகி உள்ளன. நிலநடுக்கத்தால் திபெத்தில் 30 பேர் உயிரிழந்தனர்; பலர் காயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 5 முறை நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எதிரொலியாக இந்தியாவில் டெல்லி, பீகார், மேற்கு வங்கத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டது.