» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா : கட்சி தலைவர் பதவியிலிருந்தும் விலகல்..!

செவ்வாய் 7, ஜனவரி 2025 11:22:21 AM (IST)

கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். மேலும், லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ (வயது 53) செயல்பட்டு வந்தார். 2015ம் ஆண்டு முதல் 9 ஆண்டுகள் கனடாவின் ஜஸ்டின் செயல்பட்டு வந்தார். அதேபோல், லிபரல் கட்சியின் தலைவராகவும் அவர் செயல்பட்டார். இதனிடையே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு அந்நாட்டு மக்களிடையே பெருமளவு குறைந்து வந்தது. மேலும், சொந்த கட்சிக்குள்ளும் செல்வாக்கு குறைந்தது.

கனடா பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மேலும், அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்க உள்ள நிலையில் கனடா மீது அதிக அளவில் வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாட்டின் பொருளாதார சூழ்நிலை, சொந்த கட்சிக்குள் கடும் எதிர்ப்பு, பொதுமக்களிடம் ஆதரவு குறைவு உள்பட பல்வேறு காரணங்களால் கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ராஜினாமா செய்தார். அதேபோல், லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் ட்ரூடோ ராஜினாமா செய்தார். அதேவேளை, நாட்டின் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இடைக்கால பிரதமராக தொடர்ந்து செயல்படுவதாக ட்ரூரோ அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory