» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரயிலில் பெண்ணை தீ வைத்து எரித்து கொலை செய்த கொடூர வாலிபர் கைது!

செவ்வாய் 24, டிசம்பர் 2024 12:42:40 PM (IST)



அமெரிக்காவில் ரயிலில் பெண்ணை தீ வைத்து எரித்து கொடூரமாக கொலை செ்யது அதனை ரசித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் புரூக்ளின் நகா் நோக்கி ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. மன்ஹாட்டன் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அந்த ரயிலில் ஒரு இளம்பெண் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஒரு வாலிபர் அவரது ஆடையில் தீ வைத்தார். இதனால் உடல் முழுவதும் தீ பற்றியதால் இளம்பெண் அலறி துடித்தார். ஆனால் அவர் சாகும்வரை அந்த வாலிபர் நின்று ரசித்துக் கொண்டிருந்தார்.

பின்னர் மன்ஹாட்டன் ரயில் நிலையத்தில் இறங்கிய அவா் சாதாரணமாக நடந்து சென்றார். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முன்விரோத தகராறில் இந்த கொலையை செய்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். 

கைது செய்யப்பட்டவர் குவாத்தமாலாவைச் சேர்ந்த சபேட்டா என்பதும், இதற்கு முன்னர் நாடு கடத்தப்பட்டவர் என்றும், அமெரிக்காவில் இருக்க அவருக்கு அனுமதி இல்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இறந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக நியூயார்க் நகர காவல்துறை ஆணையர் ஜெசிகா டிஷ் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory