» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வேண்டும் : இந்தியாவிடம் வங்கதேசம் கோரிக்கை!

திங்கள் 23, டிசம்பர் 2024 5:11:28 PM (IST)

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய அரசுக்கு வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 

வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது நடைபெற்ற கொலைக்கு ஷேக் ஹசீனாதான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்ப இந்தியாவுக்கு வங்கதேச அரசு வாய்மொழியாக கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசு ஷேக் ஹசினாவை மீட்டு விசாரிக்க திட்டமிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory