» செய்திகள் - விளையாட்டு » உலகம்

துறைமுகங்கள், விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை: அமெரிக்கா உத்தரவு

சனி 21, டிசம்பர் 2024 4:19:22 PM (IST)

அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் அருகே டிரோன்கள் பறக்க ஒருமாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் விமானப்படைத்தளம் உள்ளது. அம்மாகாணத்தின் டேடன் நகரில் அமைந்துள்ள இந்த விமானப்படைத்தளம் உலகின் மிகப்பெரிய விமானப்படைத்தளங்களில் ஒன்றாகும். இதனிடையே, கடந்த சனிக்கிழமை முதல் விமானப்படைதளத்தின் அருகே மர்ம டிரோன்கள் பறந்துகொண்டிருக்கின்றன. அதேபோல், நியூயார்க், நியூஜெர்சி, யுடா உள்பட பல்வேறு மாகாணங்களில் விமான நிலையங்கள், விமானப்படைத்தளங்கள் அருகே மர்ம டிரோன்கள் பறந்துகொண்டிருக்கின்றன.

இந்த டிரோன் நிகழ்வில் வெளிநாட்டு நபர்களின் சதி இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டின் நியூயார்க், நியூஜெர்சி போன்ற மாகாணங்களில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் அருகே டிரோன்கள் பறக்க ஒருமாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்களை பறக்கவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory